புரியாத புதிர்.

இறப்பை நோக்கி செல்கின்ற
வாழ்க்கை எனும் பயணத்திலே
இருள் சூழ ஒளி விளக்கேற்றி
கொண்டாடும் நாள்தான் பிறந்தநாளோ
எனக்கேனோ இது விளங்கவில்லை
பிறந்தால் சிரிப்பதும் இறந்தால் அழுவதும்
இன்னும் எத்தனை யுகங்கள் தெரியவில்லை
யமன் அவன் இடைவெளி, குறைகின்ற தருணம்
இதை உணர்த்தும் நாளை நானும் கொண்டடுவேனோ
ஏனோ பலரை போல் பக்குவம் இல்லாத மனம் கொண்டேனோ
இது நான் பெற்று வந்த முன் ஜென்ம சாபாமோ
இல்லை என் மீது நான் கொண்ட கோபமோ
புரியவில்லை இதன் விளக்கம்
புரிந்தால் சொல்லுங்களேன் எனக்கும்
கருவுற்ற போதே நான் என்ற
அகந்தையும் என்னுள் முளைத்துவிட்டது
இதை அறுத்து எறியும் வழி அறியேன் ஆதலால்
வேண்டுதல் வேண்டாமை நிலை வேண்டும்
என்ற போதும் மீண்டும் பிறவாத
நிலை வேண்டுகின்றேன் இந்நாளிலே.

எழுதியவர் : gopinath (7-Jan-11, 2:36 pm)
Tanglish : puriyaatha puthir
பார்வை : 528

மேலே