கல்வி -பாடல்
வாழ்கையின் பாதையில்
கல்வியும் வெளிச்சமே !
உண்மையை உணர்திட்டால் 
வாழ்கையும் சிறக்குமே !
உந்தன் வாழ்கையும் ஒரு பசுஞ்சோலை 
அதில் நாளும் முக்கியம் கல்விச்சாலை 
வளர்ச்சிக்கு தடையாய் கல்லாமை 
கல்வியின் ஒளியால் அகலும் அறியாமை 
சிற்பியின் கையில் உளியைப்போல் 
கல்வியின் துணைகொண்டு ஒளிவீசு 
நண்பா சிந்தித்து நல்ல முடிவெடு 
உந்தன் செயலினில் ஊக்கம் காட்டிடு
நீயும் விலங்கினில் இருந்து வேறுபடு
கல்வியும் தருமே நல்ல வேறுபாடு 
காலமும் நேரமும் உன் வசமே 
கனிந்திடும் வேளையிது புறப்படு!!!!!!!
 
                    
