வழிப்போக்கர்கள்

நான்

எழுத நினைத்ததை

எழுதிச் சென்றன

கடல் அலைகள்

நான்

வரைய நினைத்ததை

வரைந்துச் சென்றன

மழைகால மேகங்கள்

நான்

பாட நினைத்ததை

பாடிச் சென்றன

தென்றல் காற்று

இப்படித்தான்

நான்

வாழ நினைத்ததை

வாழ்ந்து செல்கின்றனர்

வழிப்போக்கர்கள்........

நல் வழிப்போக்கர்கள்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (12-Oct-13, 12:54 pm)
Tanglish : vazhippokkarkal
பார்வை : 82

மேலே