காத்திருப்பு
ஆதவன் கவிழும் வேளை
பொன்னிற மாலை
வந்தேன் பூஞ்சோலை
தென்றலும் வீச
பட்சியினங்கள் ஓசையிட
அமர்ந்தேன் ஓர் ஓரம்
கல்லில் கைவண்ணம் செய்த
சிறு திண்ணை மீது
பிடிபடவில்லை காட்சி
இல்லையதற்கு சாட்சி
தென்றலும் அணைக்கவில்லை
கானங்களை செவி ஏற்கவில்லை
அயர்ந்தும் போனேன் சற்று
விழியும் மூடினேன் சற்று
காட்சிகள் விரிந்தன
மனக்கதவு திறந்தது
.
சோலை
நடுவில் அழகிய பாதை
இருபுறமுமம் பூத்துக்குழுங்கும் மலர்கள்
பறவைகளை கண்டேன்
கொஞ்சிப்பேச கண்டேன்
இதமாய் வீசும் தென்றல்
தலையாட்டும் மரங்கள்
கண்டும் கொண்டே வந்தேன்
ஓர் இடம் தடுமாறி நின்றேன்
படபடக்கும் வண்ணத்துப்பூச்சி
அதன் அழகில் மயங்கிய நீயும்
அதைக்கண்டு கொண்டே வந்தாய்
காணமல் என் மேல் மோதி நின்றாய்
பேச நா குழற
சுவாசமும் கணம் தடைபட
திகைத்தே நீயும் நின்றாய்
படபடக்கும் விழியில்
பேசாது தூண்டில் போடும் அழகில்
தொலைந்தும் போனேன் நானும்
சிரித்து விட்டாய் நீயும்
அகமகிழ்ந்துவிட்டேன் நானும்
திறந்தது மனக்கதவு
விரித்தது காதல் சிறகு
அளந்தது கணத்தில் உலகை
வலம் வந்தது உன்னை
சுமந்து கொண்டே என்னை
நாளுமே நகர்ந்தது
கனிவுடன் இருந்தது
தினம் வந்தோம் சோலை
கதைத்து இருந்தோம் பல வேளை
இடம் மாறியது இதயம்
தடம் மாறாது அன்பும்
அந்தோ
விதி செய்தது சதி
எடுத்துக்கொண்டது விதி
நீ சதியாகும் முன்னே
நிர்கதியாகி நின்றேன்
உனையே நெஞ்சில்
வரித்துக்கொண்டேன்
இருக்கும் வரை
வருவேன் சோலை
நினைவுகளை
அசைபோட்டுச்செல்வேன் மாலை
.
தீண்டியது தென்றல் இதமாக
விழித்தும் விட்டேன்
தழுவும் தென்றலில்
உந்தன் சுவாசம்
உந்தன் குரலும்
மானசீகமாக எனையும்
தழுவிச்சென்றாய்
பனிக்கிறது விழிகள்
.
காத்திருக்கிறேன்
நாளை மாலை வரும் வேளை
உன்னோடு உறவாட
விரல் பிடித்து நடை போட
உன்னவன்
Rs Av

