உணவளிக்கும் மரணமங்கை !!
உணவளிக்க அழைக்கிறாய் , என் பசி ஆற
நானும் வருகிறேன்!
உணவு உண்ணும் பேரில் , உன் அழகை காண.
மங்கையே உனக்காய் மரணம் நாடினால்
மரண கயிரிலும் மல்லிகை வாசமடி !!
மண்ணுலகில் உயிர் நீத்து
விண்ணுலகம் சென்றேன் , விண்மீன்களுக்கு
மத்தியில் உன் விழிகள் என்னை வரவேற்குதே!
வேண்டாம்! இந்த(உணவு) விளையாட்டு
வேண்டுகிறேன் இறைவனிடம் !!

