"அன்புள்ள தாத்தாவுக்கு"

"அன்புள்ள தாத்தாவுக்கு"

நடு வீட்டில் நான் இருக்க
தெரு ஓரம் சத்தம் வரும்
நீ நடந்து வரும் வேல,

கட்டு கட்டுன்னு சத்தம் வரும்
உன் கைபிடி தடி ஓசை
நீ வலம் வரும் நேரம்,

தாதா நீ தள்ளாடும் வயதினிலே
எனக்கு நடை போட கற்றுத்தந்தாய்,

நான் அழும் வேலையில
உன் முதுகில்
குதிரை ஏற்றி வலம் வருவாய்,

விருந்தினர் வீடு சென்று
நீ திரும்பும் வேலையில
நான் ஓடி வந்து அலசிடுவேன்
உன் தோல் துண்டு முடுச்ச,

கண்ணு பணியரமோ,
கம்ப ரொட்டி ,எள்ளுருண்டை
நீதரும் போது
வாயெல்லாம் நெய் ஒழுகும்,

தப்பொண்ணு செய்யயில
வலிக்காம நீ கிள்ள
சத்தம் போட்டு நான் அழுவேன்
வலிக்கிதே தாத்தானு,

வாடா பேராண்டின்னு
தோள்மீது தூக்கி போட்டு
தாலாட்ட தொடங்கிருவ,

நான் அழுதத நீ நெனச்சு
என் அருகில் நீ தூங்க
உணவுண்ண மறந்துடுவ,

நீ இருக்கும் போது
உன் அருமை தெரியலையே,

நீ அமர்ந்த திண்ணையில
ஈரம் இன்னும் காயலையே,

தாத்தா!

அனுபவ தூணா
ஆணியில தொங்குறியே!

எங்க புரிய போகுது
பொறுப்பு இல்லாத
என் அப்பா அம்மாக்கு ,

நாளை இந்த நிலைமையும்
அவர்களுக்கு என்பதை ....

உங்கள் நினைவுகளுடன்
பேரன் :சேர்ந்தை_பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை_பாபு.த (16-Oct-13, 4:25 pm)
பார்வை : 245

மேலே