காத்திருப்பு......!!!

பெண்ணே......!
உனக்கான காத்திருப்புகளில்
பல நாட்கள் கோபத்துடன்
காத்திருப்பேன்.....!

தயக்கத்தோடு வருவாய் தாமதமாக
தனிமையில் உன்னை
திட்டிக்கொண்டிருப்பேன்.....!

தொலைவில் உன்னைப் பார்த்ததும்
மெலிகாய் சிரிப்பேன்....!
சிரிப்பை மறைத்து கோபம்
கொள்வேன் போலியாய்....!

அருகில் நீ வர வர அத்தனை
கோபமும் எங்கே போனது
என நானே தேடுவேன்....!!

எழுதியவர் : எம்.எஸ்.எம்.சமீர் (16-Oct-13, 4:59 pm)
சேர்த்தது : sameer
பார்வை : 88

மேலே