என்றேனும் என் நினைவு உனக்கு வந்தால் 555

பெண்ணே...

வானில் பௌர்ணமி நிலவை
காணும் போதெல்லாம்...

உன்முகம் தானடி
என் நினைவில்...

உன் நினைவுகளும் நாம்
பழகிய நினைவுகளும்...

நிமிடத்திற்கு நிமிடம்
என்னை தாக்குதடி...

நீயோ உன் நினைவுகள்
மட்டுமல்ல...

நாம் பழகிய நினைவுகளே
வரவில்லை என்கிறாயடி...

கண்ணே என் பெயர் சொல்லி
யாரோ அனுப்பிய குறுந்தகவலுக்கு...

எனக்கு நீ தரும்
வேதனைகள் போதுமடி...

என்னருகில் நீ இருந்த
ஒவ்வொரு மணித்துளிகளும்...

வினாடியாய் மாரியதடி...

என்னை நீ
பிரிந்த போது...

வினாடி கூட
மணித்துளிகளாய் மாறுதடி...

கண்ணே மீண்டும்
என்னை பார்ப்பாயா...

தினமும் என்னை
கடந்துதான் செல்கிறாய்...

தலை நிமிர்ந்து பார்க்க
மறுபதென்னடி...

சாலையோரம் நான்
அமர்ந்திருந்தால்...

பார்பாயென
காத்திருக்கிறேன்...

நீயோ எங்கோ பார்த்தபடி
தலை நிமிர்ந்து செல்கிறாயடி...

என்றேனும் என் நினைவு
உனக்கு வந்தால்...

அன்று என்னை
திரும்பி பாரடி...

எங்கயோ பார்த்தபடி
என்னை கடந்து...

உன்னையே நான் பார்த்தபடி
காத்திருகிறேனடி...

உன் பார்வைக்காக...

உன் பார்வை என் மேல்
படாதா கண்ணே...

உன் திருமண நாளிலாவது
என் நினைவு உனக்கு வந்தால்...

உன் அழைபிதழ்
அனுப்பி வை...

நிச்சயம் நான்
வரமாட்டேன்...

உன் கரம் பட்டு இறுதியாய்
நீ அனுப்பி வைக்கும்...

உன் பொகிஷத்தை காண
காத்திருகிறேனடி...

என் உயிரை என் கையில்
வைத்துகொண்டு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (18-Oct-13, 5:27 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 317

மேலே