வெற்றிலையும் பாக்கும் ...

வீதியில்
விளையாடிக் கொண்டிருந்த
பிள்ளையின் அருகில் வந்து
ஆசை முத்தம் ஒன்றை
ஓசை இன்றி தந்து
கையில் காசு வைத்து
கண்ணன் வரும் நேரம்
பூசை செய்திட வேண்டும்
அடுத்திருக்கும் கடை சென்று
வெற்றிலையும் பாக்கும்
வாங்கிவரச் சொன்னாள்
வெற்றிலையும் பாக்குமா ?
என்றே அவன் கேட்க
என்ன நினைத்தாளோ
அவன் அன்னை
பிஞ்சுக் கை இரண்டை பிடித்து
நெஞ்சோடு அணைத்திட்டாள்
கண்முன் கண்ணனைத் தான்
கண்டிட்டாளோ ?

எழுதியவர் : (21-Oct-13, 4:09 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 58

மேலே