மறுசுழற்சி
உலகம் வெப்பமயமாதலில் கருகி வருகிறது
புல் பூண்டு வளர்க்க இடம் இல்லாமல்
கூரைகளில் மணல் பரப்பி சுந்தரவனமாகும்
கட்டிடங்கள் மரக்கூழ் செய்ய
மரங்கள் இல்லாமல் காகிதங்களே
காகிதமாகிய கதையில் கசங்கி போன
என் காதல் கடிதம் போல் மறுசுழற்சிபடுமோ காதல்.