ஏன் இந்த மாற்றம்

கேளடா சமுதாயமே !
சிரிப்புடன் வாழ்க்கை பயணம்
பயணிக்க பெற்றோர் திருமண
முடிவு எடுத்த தருணம் பெண் கண்களில்
ஆனந்த கண்ணீரும் வெட்கமும்
நிறைய தலைகுனிந்து நடந்தது
அந்த காலம்!.....

நான் இவனை காதலிக்கிறேன்
என்று பெற்றோர் வெட்கப்பட
தலைகுனிய வைக்கிறது
இந்த காலம் !.....

அடுப்படியில் கருகி
வாழ்க்கை பாடத்தை கற்றது
அந்த காலம்!......

ஒய்யாரமாய் அமர்ந்து
கணினியில் பாடம் கற்கிறது
இந்த காலம்....

பெண் உடுத்திய சேலையில்
அழகு மாறாமல் பதிந்து நின்றது
அந்த காலம்!.......

கண் திறந்து பாக்கும் ஆண்களின்
விழிகளில் சிமிட்டாமல் எதிரொலிக்கிறது உடைக்களின் மாற்றத்தில்
இந்த காலம் !.....

அச்சம் ,மடம்,நாணம் ,பயிர்ப்பு
நான்கு குணங்களில் சிறந்தது
அந்த காலம்!......

மற்றவர்களை அச்ச பட வைக்கிறது
இந்த காலம்!.....

சோதனையில் உடன்கட்டை ஏறியது
அந்த காலம் !......
சாதனையில் விண்வெளி ஏறும் காலம்
இந்த காலம்!.....

பெண்ணே மாற்றம்
நம் விடுதலையில் இருக்கட்டும்...
வெற்றிக்களில் இருக்கட்டும்.....

வேண்டாம் ஒரு கலாச்சார மாற்றம்....
வேண்டாம் நம் பெண் பெருமைகளில் ஒரு மாற்றம் .....
சிந்திப்போம் பெண்ணாக பிறந்ததன் சிறப்பை உணர்வோம்!......


என்றும் உங்கள்
உமா நிலா

எழுதியவர் : உமா நிலா (25-Oct-13, 10:39 am)
பார்வை : 178

மேலே