முரண்பாடு

வானவில்லை உடைத்து
அதன் வண்ணங்களை பிரித்து
விளையாடுகிறாய்!

என் மனப்பிம்பத்தின்
பிரதிபலிப்பாய் இல்லாமல்
பிறழ்வாய் தெரிகிறாய்!

வெளிச்சத்தை விழுங்கும்
இருட்டு போல என்
வாழ்க்கையை விழுங்குகிறாய்!

முரண்பாட்டின்
மொத்த உருவமே
உன் பெயர்தான் காதலா?

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (29-Oct-13, 7:59 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே