புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் |
இடம் | : மண்ணச்சநல்லூர் |
பிறந்த தேதி | : 02-Jun-1976 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 175 |
புள்ளி | : 56 |
கனிதந்த மரத்தின்
விதைதனை எச்சத்தோடு
விதைத்தது
நன்றி மறவா காகம்...
கரைகள் புரண்டு
வரைகள் அகன்று
நுரைகள் குதிக்க
தரைகள் குளிக்க
விரைந்த காவிரியே!
நாடகக்காரனின் சிறையில்
நாள்பட தங்கியது ஏனோ?
தஞ்சை தரணியின்
நெஞ்சை காயவைத்தது ஏனோ?
நெல்லாக விளைந்த நிலம்
கல்லாக இறுகிட
கன்னடனின் மனம்
கனியாதது ஏனோ?
சிறைகளை உடைத்து
கரைகளை நிறைத்து
வளங்களை தர
வருவாய் காவிரியே!
கரைகள் புரண்டு
வரைகள் அகன்று
நுரைகள் குதிக்க
தரைகள் குளிக்க
விரைந்த காவிரியே!
நாடகக்காரனின் சிறையில்
நாள்பட தங்கியது ஏனோ?
தஞ்சை தரணியின்
நெஞ்சை காயவைத்தது ஏனோ?
நெல்லாக விளைந்த நிலம்
கல்லாக இறுகிட
கன்னடனின் மனம்
கனியாதது ஏனோ?
சிறைகளை உடைத்து
கரைகளை நிறைத்து
வளங்களை தர
வருவாய் காவிரியே!
யாரோ நட்டு வைத்த மரம்
எப்போதோ பெய்த
பருவ மழையால் உயிர்த்திருந்தது
யாரென்று தெரியாத
எனக்கு நிழலும்,
பசிக்கு கொஞ்சம்
கனியும் கொடுத்தது..
காற்றில் கலந்து வரும்
ஏதோ ஒரு பறவையின்
கீச்சுக்குரல் பாட்டை
தலையை ஆட்டி ரசித்தவாறே....
பறவைக் கூடு ஒன்று
வேலியில் இருந்தது
பத்திரமாக எடுத்து வைத்தேன்!
பறவைக்கூட்டைக் கண்ட அம்மா
இதை எதற்கு எடுத்து வந்தாய்? என்றாள்
அதை பாதுகாத்து மீண்டும்
பறவையிடம் ஒப்டைப்பேன்
அடுத்த பருவத்திற்கு பயன்படுமே என்றேன்!
ஒவ்வொரு பருவத்திலும்
புதிதாக கூடு கட்டித்தான்
பறவைகள் முட்டையிடும்
பழைய கூட்டை தூக்கி வீசு
என்றாள் அம்மா
எனக்கு ஞாபகம் வந்தது
தாத்தா கட்டிய வீட்டிற்கு
அப்பாவும் சித்தப்பாவும்
அம்மாவும் சித்தியும்
சண்டையிட்டுக் கொண்டது
புதிய வீடு என்பது
பறவைகளுக்கு மட்டுந்தானா?
பரம்பரை சொத்தென்று
மனிதர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்?
வாய்க்கால் நீரில்
கால்நனைத்து கொண்டிருந்தேன்...
வாய்ப்புகள் கை நழுவிச்
சென்றதை எண்ணி...
காலுக்கு அடியில்
ஓடும் வாய்க்கால் நீரில்
அடித்து வரப்பட்ட பொருளொன்று
உரசிச் சென்றது கால்களை!
தேங்கிய நீரில்
தொலைந்ததை தேடுவதைவிட
ஓடும் நீரில்
உறுமீனைத் தேடுவோம்!
ஓ! ஓடும் நீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
நொடிக்கு நொடி புதிதுதானோ?
தொலைந்து போன வாய்ப்புகளைவிட
தொடர்ந்து வரும் வாய்ப்புகளை
கண்டுணர்ந்தால் வெற்றி வசப்படாதா?
புதிய உற்சாகம்
புதிய முயற்சி
கொஞ்சம் அனுபவம்
எல்லாம் கலந்ததுதானே வெற்றி?
கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும் புதிதானதே!
வாய்க்கால் நீரில்
கால்நனைத்து கொண்டிருந்தேன்...
வாய்ப்புகள் கை நழுவிச்
சென்றதை எண்ணி...
காலுக்கு அடியில்
ஓடும் வாய்க்கால் நீரில்
அடித்து வரப்பட்ட பொருளொன்று
உரசிச் சென்றது கால்களை!
தேங்கிய நீரில்
தொலைந்ததை தேடுவதைவிட
ஓடும் நீரில்
உறுமீனைத் தேடுவோம்!
ஓ! ஓடும் நீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
நொடிக்கு நொடி புதிதுதானோ?
தொலைந்து போன வாய்ப்புகளைவிட
தொடர்ந்து வரும் வாய்ப்புகளை
கண்டுணர்ந்தால் வெற்றி வசப்படாதா?
புதிய உற்சாகம்
புதிய முயற்சி
கொஞ்சம் அனுபவம்
எல்லாம் கலந்ததுதானே வெற்றி?
கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும் புதிதானதே!
தனிமையில்
தொலைதூர பயணம்
என்னோடு எப்போதும்
பயணித்துக்கொண்டு இருக்கிறது
அவள் நினைவுகள்!
பயணத்தின் இடையே நான்
ஓய்வெடுத்தாலும் உறங்காமல்
ஆயிரம் கதை சொல்லியபடி
அவள் நினைவுகள்!
இடைநில்லா
என் பயணத்தில்
பாதை பார்த்து
நடப்பதை தவிர்த்திருக்கிறேன்!
அவள் நினைவு சொல்லும்
கதைகளை கேட்டபடி!
எப்போதும் முடியாது
என் பயணம்
அவள் கரமும்
என் கரமும்
இணையும் வரை!
வாழ்க்கை எப்போது அழகாகின்றது ?