கூடு

பறவைக் கூடு ஒன்று
வேலியில் இருந்தது
பத்திரமாக எடுத்து வைத்தேன்!
பறவைக்கூட்டைக் கண்ட அம்மா
இதை எதற்கு எடுத்து வந்தாய்? என்றாள்
அதை பாதுகாத்து மீண்டும்
பறவையிடம் ஒப்டைப்பேன்
அடுத்த பருவத்திற்கு பயன்படுமே என்றேன்!
ஒவ்வொரு பருவத்திலும்
புதிதாக கூடு கட்டித்தான்
பறவைகள் முட்டையிடும்
பழைய கூட்டை தூக்கி வீசு
என்றாள் அம்மா
எனக்கு ஞாபகம் வந்தது
தாத்தா கட்டிய வீட்டிற்கு
அப்பாவும் சித்தப்பாவும்
அம்மாவும் சித்தியும்
சண்டையிட்டுக் கொண்டது
புதிய வீடு என்பது
பறவைகளுக்கு மட்டுந்தானா?
பரம்பரை சொத்தென்று
மனிதர்கள் ஏன் அடித்துக் கொள்கிறார்கள்?

எழுதியவர் : புஷ்பராஜ் (14-Jun-17, 9:23 am)
Tanglish : koodu
பார்வை : 65

மேலே