வருவாய் காவிரியே

கரைகள் புரண்டு
வரைகள் அகன்று
நுரைகள் குதிக்க
தரைகள் குளிக்க
விரைந்த காவிரியே!

நாடகக்காரனின் சிறையில்
நாள்பட தங்கியது ஏனோ?
தஞ்சை தரணியின்
நெஞ்சை காயவைத்தது ஏனோ?

நெல்லாக விளைந்த நிலம்
கல்லாக இறுகிட
கன்னடனின் மனம்
கனியாதது ஏனோ?

சிறைகளை உடைத்து
கரைகளை நிறைத்து
வளங்களை தர
வருவாய் காவிரியே!

எழுதியவர் : புஷ்பராஜ் (3-Apr-18, 2:26 pm)
பார்வை : 78

மேலே