தமிழுக்கு பின் நீ
இயல்பான உன் சிரிப்பால் ஒரு நொடியில்
என் இதயத்தை கிழித்து செல்கிறாய்..
என் இளமையை தூண்டிவிட்டு
கற்பனையை கருத்தரிக்கவிட்டு
கள்வனே கணப்பொழுதில் என் கண்ணீரில் கரைவதேன்?
எங்கே கற்றுக்கொண்டாய் இந்த விளையாட்டை ?
ஏங்கி நிற்கும் என் காதல் கர்வத்தை
கண்ணீர் கசியும் இடுக்கில் போட்டு உடைக்க ?
கண்டாயோ என் காதலா? உடைந்து சிந்திய அந்த கண்ணீர் துளியிலும்
உன் பிம்பத்தை ஏந்திய என் காதலை...
தமிழுக்கு பின் என் உயிர் மூச்சாய் நீ இருக்க
எதை கொண்டு பிரிப்பாய் என்னுள் இருக்கும் உன்னை ...
மறவாதே !! எங்கனம் என் உயிர் பிரிந்தாலும் .. என்றென்றும் என் காதல் மட்டும் உன்னை சுற்றி..
உன் பால் வெள்ளை மனதை விரும்பியே ஒரு நாள் உன்னோடு சாகும் !!