அன்பே

மேனி நலிவடைந்து தோல் சுருங்கினாலும்,

காலம் கடந்து வயது மாறி கொண்டே போனாலும்,

பேசும் வார்த்தைகள் குழைந்தாலும், கண்பார்வை குன்றினாலும்,

செவிகள் கேட்கும் திறன் மங்கினாலும்,

கொழு கொழு கன்னங்களில் பற்கள் விழுந்து குழிகள் விழுந்தாலும்,

கருமையான தலைமுடிகள் உதிர்ந்து நரைத்தாலும்,
கோல் ஊன்றி தள்ளாடினாலும்,
எமன் வாழ்நாள் முடிந்தது என்று உடலை விட்டு உயிரைப் பிரித்தாலும்,
உன் மேல் நான் கொண்ட அளவு கடந்த காதலும், அன்பும்
என்றும், எப்பொழுதும், எங்கேயும் மாறாமல் காற்றில் கலந்து விட்ட
எனது ஆன்மா விண்ணுலகம் செல்லாமல் உன்னைச் சுற்றியே வலம் வரும்...

எழுதியவர் : ஏழுமலை A (3-Apr-18, 1:29 pm)
Tanglish : annpae
பார்வை : 870

மேலே