புதிய நீர்த்துளிகள்

வாய்க்கால் நீரில்
கால்நனைத்து கொண்டிருந்தேன்...
வாய்ப்புகள் கை நழுவிச்
சென்றதை எண்ணி...

காலுக்கு அடியில்
ஓடும் வாய்க்கால் நீரில்
அடித்து வரப்பட்ட பொருளொன்று
உரசிச் சென்றது கால்களை!
தேங்கிய நீரில்
தொலைந்ததை தேடுவதைவிட
ஓடும் நீரில்
உறுமீனைத் தேடுவோம்!
ஓ! ஓடும் நீர்த்துளிகள்
ஒவ்வொன்றும்
நொடிக்கு நொடி புதிதுதானோ?

தொலைந்து போன வாய்ப்புகளைவிட
தொடர்ந்து வரும் வாய்ப்புகளை
கண்டுணர்ந்தால் வெற்றி வசப்படாதா?


புதிய உற்சாகம்
புதிய முயற்சி
கொஞ்சம் அனுபவம்
எல்லாம் கலந்ததுதானே வெற்றி?
கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடியும் புதிதானதே!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (21-Apr-15, 6:43 pm)
பார்வை : 79

மேலே