தங்கம் எனப்படுவது யாதெனில்
தங்கம் எனப்படுவது யாதெனில்.....
அங்கம் குறைவிலா
மூளையில்லாச் சிங்கங்கள்
பாடுபட்டுழைக்காமல்
ஏர் பூட்டாமல்
மம்புட்டி பிடித்து
பரப்புகளை சீர்படுத்தாமல்
நீர் பாய்ச்சாமல்
களை எடுக்காமல்
செமத்தியான விளைச்சலை
கல்யாண வயலிலே அறுவடை செய்வது.....
வயிறு ஒட்டி
ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி
வாடுவோரின் கண்ணில் படாமல்...
சுருட்டும் பொல்லாரின் பல்லாகவும்...
கோடிகளில் குளிப்பவரின்
உடம்புகளை அலங்கரித்துப்பின்
வைக்க இடமின்றி தவிக்கும் போது
உண்டியலை அடையும்
துருப்புச்சீட்டாகவும் இருப்பது....
இது இல்லாததால்
பல ஏழைப்பெண்களின் வாழ்வு
கல்யாணச்சந்தையிலே
விலை போகவில்லை...
இது குறைவாக இருந்ததால்
பல மருமகள்களின் வாழ்வு
தீக்கும் சமையல் வாயுவிற்கும்
அர்பணிக்கப்பட்டுவிட்டது...
இது
நடுத்தர மக்களை
நன்றாக ஆட்டம் காட்டும்...
பெண்குழந்தை பெற்றவரை
அடிக்கடி பயமுறுத்தும்....
நடிகைகளின் மேனியிலும்
நகைக்கடைக்காரனின் விளம்பரங்களிலும்
அடிக்கடி காட்சி தந்து
"உள்ளேன் ஐயா"வென
உலகமக்களை உசுப்பேற்றும்...
எப்போதுமே
எங்களூர் விசேசங்களில்
பல ரூபமெடுத்து
கொடுக்கல் வாங்கலாய்
கும்மாளமிடும்....
இன்னும் பல நற்பெருமைகள்
இத்தங்கத்தைப் பற்றிச் சொல்ல ஆசைதான்...
ஆனால் ஒன்றே ஒன்று சொல்லி
முடித்துக் கொள்கிறேன் மக்களே....
இது கண்டிப்பாக நகைக்க அல்ல....
தங்கம் என்பது...
வேறு ஒன்றுமில்லை
என் மனசு தாங்க....
அட ஆமாங்க.. இது உண்மைங்க.....!!!!