நானென்ன கணவன் ~ஆதர்ஷ்ஜி
நானென்ன கணவன் ?
~ஆதர்ஷ்ஜி
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
மனதின் வலி மறைத்து
தன் உடலின் வலி சகித்து
என் காமத் தீ அணைக்க
அணைத்துக் கூடிக்
களைத்துப் பிரியுமென்
துணையின் உணர்வை
காதலென்று உணரேன் எனில்
நானென்ன கணவன்?
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»