நினைவுகளின் பயணம்

தனிமையில்
தொலைதூர பயணம்
என்னோடு எப்போதும்
பயணித்துக்கொண்டு இருக்கிறது
அவள் நினைவுகள்!

பயணத்தின் இடையே நான்
ஓய்வெடுத்தாலும் உறங்காமல்
ஆயிரம் கதை சொல்லியபடி
அவள் நினைவுகள்!

இடைநில்லா
என் பயணத்தில்
பாதை பார்த்து
நடப்பதை தவிர்த்திருக்கிறேன்!
அவள் நினைவு சொல்லும்
கதைகளை கேட்டபடி!

எப்போதும் முடியாது
என் பயணம்
அவள் கரமும்
என் கரமும்
இணையும் வரை!

எழுதியவர் : புஷ்பராஜ் (10-Sep-14, 2:38 pm)
பார்வை : 101

மேலே