இறந்து போன தகப்பனாரின் கம்பளித் துணி மேலங்கி

செலிமா ஹில் என்ற பிரபலமான பிரிட்டிஷ் பெண் கவிஞர் வெளியிட்ட
Portrait of my Lover as a Horse என்ற புத்தகத்தில் காதலனை நூறு விதமான
பொருட்களுடன் ஒப்பிட்டு சிறு சிறு கவிதைகளாக இயற்றியிருக்கிறார்.
அவற்றுள் ஒன்று:
பித்தான்துளைக் கண்கள் உடைய
கம்பளித் துணி மேலங்கியே!
எங்கிருந்தோ குளிர்ப்பிரதேசத்தில் இருந்து வரும்
மீன்வாடை வீசும் சிறு தெய்வங்களைப் போல,
என்னைப் பின்பற்றி வா!
அங்கே யாரும் வளர்வதில்லை!
படுக்கைகளுமே சிறிதாகத்தான்
இருக்கின்றன!
Flannel - கம்பளித் துணி .
suit - மேலங்கி