உன் பெயர் என்ன

காதிலே பூ அழகாகச் சுற்றுவதில் திற னுடன்
கண் கட்டி வித்தையிலே சிறந்து
முக்கை நுழைக்கும் வழியிலே மேம்பட்டு
வாய் வார்த்தையிலே பொய் புகுந்து
கழுத்தை நொடிக்கு ஒரு தரம் நொடித்து
நெஞ்சிலே நேர்மை இழந்து சத்தியம் தவறி
கையை நீட்டி மிரட்டி சிம்ம நடை போட்டு
பேரரசன் போல் வாழும் மனிதனே
உன் பெயர் தான் என்ன ?
நானே அரசியல் வாதி என்று மார் தட்டினான்

எழுதியவர் : வாழ்க்கை (2-Nov-13, 7:46 pm)
Tanglish : un peyar yenna
பார்வை : 1386

மேலே