எழுதி வைத்த நாடகங்களை எடுத்துப் புறட்டும் ஞானிகள்

சரித்திரமாய் சமைந்த கலைமகளே...!!!!!!
பாவிகளை சுமக்கும்
பாரதக்கருவில்
அனாதையாகிப்போன
அந்தரங்கவேசம் ஏனோ?

அஞ்சாத விடியல்
அயராத ஒளிகள்
இவையிரண்டும்
அணைந்திடவே,
இருளிகள் பிரசவித்து
இடுகாடுகள்
பிறந்திடு வதும் ஏனோ?


அந்தி, மடியும் வேளையில்
நின் ஆவியும்
முடிவதேனோ?

காமத்தின் விலைகள்
சாமத்திலே ஆகியதேனோ?

சுவரொட்டி படங்களே
உன் சுகம் பறித்து
போவ தேனோ?

மாதுளை விலைபோல்
மாதுரி விலையும் ஏனோ?

மாலைகள் யாவுமே
மலரும் முன்னே
மாயுவதும் ஏனோ?
மணமேடை யாகமும்
மண்ணுக்குள்ளே வெந்திடுவதும் ஏனோ?

வேதத்தின் புரளிகள்
உன் கேதத்திற்கு
வருவ தேனோ?

கதையளந்து போன
காலத்தின் புரளிகள்
வசைமொழிந்து
வாய்மை பேசுவது மேனோ?

நிராயுத மகளே
நிலை யுயர்ந்தது
விலை தானோ?
விலை யுயர்ந்தது நின்
நிராயுதம் தானா?

நியாயத்தீர்ப்புகளை
எழுதியது
அநியாயம் தானா?

நீதிமொழி எழுதிய கைகள்
வெறும் காகிதங்கள் தானா?

நீதி சொல்லித்தந்த ஞானிகள்
நீதி யிழந்த
வெறும் ஓவியங்கள் தானா?

சரித்திரம் படைக்க
நாடகமாடும் நாமும்
காவியங்கள் தானா?

;(

எழுதியவர் : ருத்ரா (3-Nov-13, 3:23 pm)
பார்வை : 92

மேலே