இந்தியா வல்லரசாகியிருந்தால்

இந்தியா "2020" அப்துல்கலாம் அவர்களின் அற்புதக்கனவு. எதிர்கால இந்தியா நம்மால் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியத்திருநாடு வல்லரசாகியிருந்தால் என்னவெல்லாம் நிகழ்ந்திருக்கும்? இதுவரை, நாம் வளரும் நாடாகவேயிருந்து இழந்தவைகள் என்ன? கொஞ்சம் சிந்திப்போம். வருங்காலத்திற்காக நிறைய யோசிப்போம்.

அன்று, நாடே ஒட்டுமொத்தமாக ஒரே கொள்கையில் உறுதியாய் இருந்தது. அதற்காக எந்த இழப்பையும் தாங்கி நின்றது.
பாக்கிஸ்தான் முதல் கன்னியாகுமரிவரை ஒரே உணர்வே ஓங்கி ஒலித்தது. அது, நாம் சுதந்திரம் பெறவேண்டும். அன்னிய அரசாங்கம் தாயகம் விட்டு, நீக்கப்படவேண்டும்.
ஒற்றுபட்டோம்! உறுதிபட்டோம்! வென்றிபெற்றோம்!
சுதந்திரக்காற்றை சுவாசித்தோம்!..

அன்றைய மக்களின் மனங்களில் தேசப்பற்றும், மிக உயர்ந்த கொள்கைகளும் நிறைந்திருந்தது. சிறந்த தலைவர்கள் தோன்றினார்கள். அவர்களின் தங்கமான திட்டங்களால், நாடு அடுத்தகட்ட முன்னேற்றம் கண்டது. நாட்டில் எவ்வளவோ அவலங்கள் இருந்தாலும், அதையே நினைத்து வருந்திக்கிடக்காமல், அடுத்தவரை குற்றம் சாட்டாமல், குறைகூறிக்கொண்டிருக்காமல், ஒவ்வொருவரும் தங்களால் முடிந்ததை செய்தார்கள். நாம் வளரவேண்டும், நல்ல நிலையை அடைய வேண்டும், நம்மால் பிறருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. நாம் உயர்ந்ததோடல்லாமல், நம்மால் சில ஏழை நாடுகளும் முன்னேற்றம் பெற்றது.

சுயநலத்திற்காக எல்லோரும் நல்லதை கற்றார்கள், நல்ல செயல்களை செய்தார்கள். தன்னிலையில் உயர்ந்தார்கள். கீழ்நிலையில் இருப்போர்க்கு, தன்னால் முடிந்த உதவிகளையும் செய்தார்கள். சுயநலம் பொதுநலத்தை வளர்த்தது. தேசப்பற்றும், தன்னம்பிக்கையும் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஒளிர்ந்தது. நாட்டின் ஏழ்மையும், அவலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துகொண்டிருந்தது. பொறுமையும், சகிப்புத்தன்மையும், கூரியஅறிவும், கூட்டுமுயற்சியும் சிறந்த பலனைத்தந்தது.
இன்று! நாம் எதனை வளர்க்கதவறிவிட்டோம் என்று யோசிப்போம்! எதனால் நம் வளர்ச்சி தடைபடுகிறது என்பதை உணர்வோம்!
இன்றைய இந்தியாவில் என்னதான் இல்லை? தொழில்நுட்பம் இல்லையா? சிறப்பாக செயல்படும் தொழிலாலர்கள் இல்லையா? நல்ல கட்டமைப்புகள் இல்லையா? தேவையானவற்றை உருவாக்கும் வசதியில்லையா? நம்மை ஆண்ட அன்னியர்களும், படையெடுத்துவந்த அரசர்களும் அள்ளிச்சென்றாலும் நம் செல்வங்களில் குறைகண்டோமா? இன்னும் கண்டரியப்படாத பொக்கிஷங்கள் எத்தனையோ?..

இந்தியரின் குணம் எங்கிருந்து வந்தது? இந்த அற்புதமண்!... இந்த மண்ணில் பிறந்து, வளர்ந்து, சிறந்த அதிஅற்புதர்களால்!
அன்பும், அகிம்சையும், அமைதியும், எல்லோரையும் உறவாகப்பார்க்கும் நற்குணமும், பகைவரையும் சகஉயிராக மதிக்கும் பெருந்தன்மையும், மனிதவாழ்வின் அடுத்தகட்டம் என்னயென உள்நோக்கிப்பார்க்கும் பேரரிவும் இந்தியரின் குணமன்றோ? இது, இன்றைக்கு இந்தியரல்லாது வேரெவர்க்கும் வாய்த்திருக்கிறதா?

ஒவ்வொருவர் மனதிலும் தொடர்ந்து எழும் எண்ணங்களே செயலாகிறது. தொடர்ந்த செயல்களே குணமாகிறது.
அடிப்படையில் எண்ணத்தை சீறமைப்போம்! எண்ணுவதெல்லாம் சிறப்பாக வைப்போம்!
நமது தனிப்பட்ட குணமே, இந்தியரின் குணமாகிறது. அதனால் விளையும் செயல்களே, இந்திய இனத்தின் செயலாக உலகிற்கு தெரிகிறது.

இந்தியா வல்லரசாகியிருந்தால்! எப்படியிருக்கும்?...
இலங்கை இந்திய அரசுடன் இணைக்கப்பட்ட தீவாகியிருக்கும். தமிழினத் தலைவரொருவர் அங்கே முதலமைச்சராகியிருப்பார். இலங்கையர்க்கு, புத்தமத புனிதநூள் திருக்குறளாகியிருக்கும். நாங்காம் தமிழ்ச்சங்கம் கொழும்பில் தோன்றியிருக்கும். புதுப்புது தமிழ்புலமையாலர்கள் தமிழ்த்தேன் கடலுக்குள் ஆராய்ந்துகொண்டிருப்பர். இலங்கைத்தமிழ்மனம் உலகமெல்லாம் பரவியிருக்கும்.

உலகத் தலைவர்களெல்லாம் இந்தியாவின் ஆலோசனைப்படியே நடப்பர். உலக நாடுகளெல்லாம் இந்திய கோட்பாடுகளை கடைபிடிக்கும், எவருக்கும் தீங்கு செய்யாமல், தங்களை சிறப்பாக வளர்த்துக்கொள்வது எப்படியென்பதை மற்ற நாடுகளெல்லாம் கற்றுக்கொண்டிருக்கும். உலகமெங்கும் பரவியிருந்த பசிபஞ்சமெல்லாம் இந்திய ரூபாக்கு விலைபோயிருக்கும். உலகெங்கும் அன்பும், அகிம்சையும், நட்புரவும் பரவிக்கொண்டிருக்கும்.

இந்திய கிராமத்து மாளிகைகளில் மின்னனுவில் இயங்கும் வாகனங்கள் இருக்கும். நகரத்து வானுயர் அடுக்ககங்களின் மேல்மாடியில் வானூர்திகள் நிருத்தப்பட்டிருக்கும். காஷ்மீருக்கும்-கன்னியாக்குமரிக்கும் ஒருமணி நேரத்திற்குள் சென்றுவரலாம். சென்னைவாசிகள் மும்பையிலும், டெல்லியிலும் வேலைபார்த்துவிட்டு தினமும் வீடுதிரும்புவர்.

உலகில் பலரது உடல்களிலெல்லாம் இந்தியாவில் இயற்கையாக வளர்க்கப்பட்ட உடல்பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்திய மருத்துவர்கள் உலக உயிர்கள்காக்கும் கண்கண்ட கடவுலாகயிருப்பர். புதிதாக தோன்றும் பல கொடியநோய்கள் இந்திய மூலிகைகளால் குணமாகும். காலையும், மாலையும் இந்திய யோகக்கலை உலகத்தாரின் உடற்பயிற்சியாகயிருக்கும்.

"ஆயுதபூஜை” அனைத்துலக விழாவாக கொண்டாடப்படும். தீபவொளித்திருநாள் உலகமக்களின் விருப்பத்திருவிழாவாகியிருக்கும். “பொங்கல்” இந்தியத்திருநாட்டின் மிகச்சிறந்த விழாவாகி, இந்தியர்கள் நம்மால் கொண்டாடப்படும்.

உலகெங்கும் இந்தியாவால் உருவாக்கப்படும் விஞ்ஞானிகளே முன்னோடிகளாயிருப்பர். அன்பிற்கும், அகிம்சைக்கும், அமைதிக்கும், நடுநிலைக்கும், நட்புறவிற்கும் இந்தியர்களின் பெயரே முதன்மையாக கூறப்படும்.
உலகுக்கே தீபச்சுடராக இந்தியா திகழ்ந்துகொண்டிருக்கும்.

இது கனவல்ல, கற்பனையல்ல. நடக்கவிருக்கும் நிஜம். இந்தியர்கள் நம் கைகளால் நிகழவிருக்கும் அற்புதம்.
இது அத்தனையும் நிறைவேரும். இந்தியர்கள் நாம் நினைத்தால், தடைகள் தகர்த்து அயராது உழைத்தால்!
நாம் எவருக்கும் நிகரில்லா இந்தியரென்பதை, உலகிற்கு உணர்த்துவோம்! ஒற்றுமையாக என்றும் இருந்து, ஒருவருக்கொருவர் கைகொடுத்து துணையாவோம்! எவரெஸ்டாக உயர்வோம்! “ஜெய்ஹிந்த்!”

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (8-Nov-13, 10:59 pm)
பார்வை : 4231

மேலே