சதுரங்கம்-5
மோகனின் சிரிப்பு உஷாவிற்கு கோபத்தை ஏற்படுத்தியது
"என்ன நீங்க நான் சீரியஸா கேட்டுட்டு இருக்கேன் இப்படி சிரிக்கிறீங்க?"
"சிரிக்காம என்ன பண்ண உஷா,,,, உங்களுக்கு இப்போ இந்த குழில என்ன இருக்குனு தெரியனும்,,, அவ்ளோதான"
"ஆமா"
மோகன் அந்த தோட்டத்தின் மூலையில் இருந்த மண்வெட்டியை கொண்டு அந்த குழியை தோண்ட ஆரம்பித்தான்
உள்ளே என்ன இருக்கும் ஆவலோடு பார்த்து கொண்டிருந்தாள் உஷா
சற்று நேரத்திற்கு பின் அந்த குழியிலிருந்து துர்நாற்றம் வர ஆரம்பித்தது,,, மோகன் தன் கைக்குட்டையை முக மூடி போல அணித்துக்கொண்டான்
உஷா தன் புடவை முந்தானையால் தன் கண்கள் தெரியும் வரை முகத்தை மறைத்து கொண்டாள்
முழுதாக தோண்டினான் மோகன். அங்கே
பாதி அழுகிய நிலையில் நாய்,,,,,,,,,
"என்ன மோகன் இது??"
"இதா இந்த வீடு நாய் டபர்மன் ரொம்ப பெருசு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தது,,, இப்போதான் ரெண்டு மூணு வாரத்துக்கு முன்னாடி இறந்து போச்சு,,,, அபிக்கு இந்த நாய்-னா ரொம்ப புடிக்கும்,,, அதன் வீட்டுக்கு பின்னாடியே பொதைச்சிடோம்"
உஷாக்கு அப்போது தான் உயிரே வந்தது,,
"சாரி Mr, மோகன்"- என்றாள்
"இட்ஸ் ஓகே,,,,,, எதாவது சந்தேகம்னா 1st அத தெளிவா கேட்டுகோங்க அப்புறம் தண்டனை கொடுக்கலாம்"- சொல்லி விட்டு சிரித்தான்
உஷா தான் அவசர பட்டுவிட்டோமே என்று வருந்தினாள்.
பின் மோகன் அந்த பைல்லை எடுத்து கொண்டு கிளம்பினான்
உஷா வீட்டிற்க்குள் வந்து சோபாவில் சாய்ந்தாள்...
எத்தனை நேரம் தூங்கினாள்,,,,,,,, அவளுக்கே தெரியவில்லை
கண் விழித்து பார்த்தபோது எங்கும் இருட்டு,,, எழுந்து சென்று குழல் விளக்கை போட்டாள், அது ஒளி தர மறுத்தது,,,,
"பவர் கட் போல" மனதிற்குள் சொல்லி கொண்டாள்,,,
வீட்டில் மெழுகுவர்த்தி எங்கு என்று தேடினாள், நாலடியில் சோபா இடித்தது,,, இரண்டு மூன்று தரம் சுவரில் மோதி தட்டு தடுமாறி ஒரு வழியாக மெழுகுவர்த்தியை கண்டெடுத்தாள்
தீப்பெட்டி தேடி அடுத்த தேடல் படலம்,,,,,,,,,, அதும் சமையல் அறையில் மூலையில் கிடைக்க
மெழுகு வர்த்தி தீயின் மீது காதல் கொண்டு தன் உயிரை கண்ணீராக வடிக்க ஆரம்பித்து, வீட்டிற்குள் வெளிச்சம் தந்தது
அந்த ஒளியில் மணி பார்த்தாள் இரவு ஏழு என்றது கடிகாரம்,,,,,,,,
மாலையில் வந்துவிடுவேன் என்ற மோகன் இன்னும் வர வில்லையே, சரி அவன் கொடுத்த எண்ணிற்கு போன் செய்யலாம் என்று முடிவெடுத்தாள்,,,,,,
வெளியே மழை, வானம் கரிப்பிடித்த அண்டா போல இருண்டு இருந்தது,,, பலத்த மழைக்கான அறிகுறிகள் தெரிந்தது,,,,,,, குளிர் ஊசி போல உடலை துளைத்தது
தொலைபேசியை எடுத்து காலையில் மோகன் கொடுத்த எண்ணை சுழற்றினாள்,,,,,,,,,
"ட்ரிங்,,,,,,,,,,,, ட்ரிங்,,,,,,,,, ட்ரிங்,,,,,,,,"
டைல் டோன் இறுதியில் மொபைல்-லின் சத்தம்,,,
வீட்டின் உள்ளிருந்து வந்தது,,,,,,,
மோகன் வந்துவிட்டான் போல, என்று தொலை பேசியை கட் செய்யாமல் கையில் தீப்பெட்டியுடன் அப்படியே அவனின் மொபைல் சத்தம் வந்த இடம் நோக்கி போனாள்.
ஒரு அறையிருந்து அந்த சத்தம் வந்தது,,, அறையின் கதவு வெறுமனே சாத்தி இருந்தது,,,, திறந்தாள்.
உள்ளே கும்மிருட்டு,,,,,,,,, தீக்குச்சியை உரசினாள்
அங்கே ,
தரையில் உடலெங்கும் இரத்தத்துடன்,,,,,, கரு விழிகள் விட்டத்தை பார்க்க இறந்து கிடந்தான் மோகன்
(விளையாடுவோம்,,,,,,,,,,)

