சதுரங்கம் -4

ஆறடி நீளக்குழியில் எதோ புதைக்கப் பட்டிருக்கிறது என்று உணர்ந்தாள் உஷா

வீட்டினுள் வந்து விட்டாள்,,, இப்போது மீண்டும் மனதில் பயம் என்னும் நண்டு ஊர ஆரம்பித்தது

"அது யாராக இருக்கும் உண்மையில் காலையில் பார்த்தது கோழியின் இரத்தம் தானா,,,,,,, வெளியில் புதைக்கப்பட்டிருப்பதென்ன ???,,,, "- குழப்பத்தில் தவித்தாள்

மனதில் பயம் நெருட,,,,, வேண்டாம் பணமும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் ஒழுங்கா வீடு போய் சேரலாம்

மீண்டும் தன் சூட்கேசை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்,,,,,,,,,,,,,,,,

சரியாக அந்த நேரம் வந்து இறங்கினான் மோகன்

உஷா கையில் பெட்டியோடு நிற்பதை பார்த்த மோகன்

"என்ன உஷா வீட்டை விட்டு போறதா இருந்தா வீட்டில் இருக்குரவங்கள்ட சொல்லிட்டு போகணும்னு தெரியாதா"- என்றான்

"உண்மையானவங்கள்ட தான் சொல்லிட்டு போகணும் உங்கள மாதிரி பொய்யர்கள்ட எதுக்கு சொல்லணும்"

சற்று கடுமையானான் மோகன்," என்ன உஷா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு"

"வேற வேற மாதிரி நடக்குரவங்கள்ட என் பேச்சு இப்டி தான் இருக்கும் "

"ஐயோ உஷா நீங்க ஏன் இப்டி பேசுறீங்க,,,,,,,,,,,,, இப்போ என்ன ஆச்சு"

"சரி எதோ வேல விஷயமா போறேன்னு சொன்னீங்க இப்போ எதுக்கு வந்துருகீங்க வேவு பாக்க தானே"

"நான் எதுக்கு வேவு பாக்கணும்"

"பொதுவா தப்பு பண்றவங்க இப்படி வேவு பாக்குறது சகஜம்"

"உங்க இஷ்டத்துக்கு பேசாதீங்க உஷா அந்த பிரிட்ஜ் contract சம்மந்தமா ஒரு முக்கியமான டாக்குமென்ட் எடுக்க தான் நான் இப்ப வந்தேன்"

"ம்ம் அப்புறம்"

"முதல என்ன சந்தேகத்தோட பாக்குறத விடுங்க,,,,,,, இங்க உங்களுக்கு என்ன தான் பிரச்சன"

"பிரச்சனையா,,,,,,,,,, வாங்க காட்டுறேன்"

மோகனை அந்த மணல் மேடுள்ள இடத்திற்கு கூட்டி சென்றாள் உஷா

"என்ன இது,,,,,,, ஆறடி நீளத்துல"

அதை பார்த்த மோகன் வாய் விட்டு சிரித்தான்

"ஓ! இத பாத்துதான் பொட்டிய தூக்கிடீங்கலா???""


அவனின் சிரிப்பு தொடர்ந்தது,,,,,,,,,,,,,,


(விளையாடுவோம்,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (20-Nov-13, 9:47 am)
பார்வை : 420

மேலே