பார்வை ஒன்றல்ல

வெகுநேரம் ஆகி விட்டது அவளை காணவில்லை ..
எப்பொழுதும் வருவாள் ....
என்னவென்று புரியவில்லை ...
தொலைபேசியிலும் அவளை தொடர்புகொள்ள முடியவில்லை ..

தொலைபேசியில் பதில் அளித்தவள் இன்று ஏன் ஒரு செய்தியும் அனுப்பவில்லை ...தொடர்பும் செய்யவில்லை....யோசித்த வண்ணம் சாம் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான் ஆனால் அவன் கண்கள் பாதையில் அவள் எப்போது வருவாள் என்ற ஏக்கத்தொடு காத்திருந்தது ......

சிறிய சினுங்கல் சிணுங்கியது அவனுடைய தொலைபேசி ஏக்கத்தோடு என்னையும் பாரடா அவள் என்னுள்ளும் வருவாள் என்ற செய்தியோடு ...
சோர்வடைந்த கண்கள் உறங்குவதற்கு தயாரானது போல இமைகள் இரண்டும் மூடி...ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்து செல்லபட்டவன் திடீரென அலறியடித்து எழுந்தது போல அவன் இமைகள் இரண்டும் திறந்து தொலைபேசியில் வந்த செய்தியை பார்த்தது .....

அதில் ...

" வந்துகொண்டு இருக்கிறேன் " என்ற செய்தி ப்ரியா என்ற பெயரில் இருந்தது.......

வேகமாக தனது தொலைபேசியை எடுத்து தமிழ் படத்தில் வழக்கம் போல் கேட்பதுபோல் ப்ரியாவின் தொலைபேசிக்கு " ஏன் தாமதம் " என செய்தி அனுப்பினான்.....

"ப்ரியா"
வண்ணத்து பூச்சிகள் வட்டமிடும் அவளை...
ரோஜாக்கள் தொட நினைக்கும் அவளை ...
தென்றல் பயப்படும் அவளை வேகமாக சீண்ட ...
பயத்தினால் அல்ல அவளுக்கு வலிக்குமோ என்று ..
ஒற்றை காலில் நிற்கும் தாமரை கால் ஒடிந்தாலும் பரவாயில்லை என்னை உன் கரங்களில் ஏற்றுக்கொள் என்று கெஞ்சும் ....மல்லிகைப்பூ தன்னை மறந்து சொல்லும் என்னை போலவே அவள் கண்கள் என்று ...அவள் இமை மூடி திறப்பதை பார்த்தால் தென்றலும் அவளிடம் மெல்ல கேட்க்கும் அதுபோல எனக்கும் மெல்ல வீச கற்றுகொடு என்று ....

வர்ணிக்க வார்த்தை இல்லை .....

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ப்ரியா யாரிடமும் பேசமாட்டாள் அமைதியாக இருப்பாள் பூந்தோட்டம் இருக்கும் இடத்தில் தென்றல் இருப்பது போல ...சராசரியாக மதிப்பெண் பெறுபவள் எந்த ஆசிரியரிடமும் கேட்ட பெயர் எடுக்காதவள் அழகாக பாடுவாள் ..மரியாதையாக எல்லோரிடமும் நடந்துகொள்வாள் ...தந்தை ரயில்வேயில் மேலதிகாரியாக வேலைபார்க்கிறார் அம்மா வீட்டை பார்த்துகொண்டு மாலை நேரத்தில் சிறு குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிகொடுப்பவர் ...(குயிலின் தாய்க்கு பாட எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்)....

இரவு நேரம் எப்படி இருந்தாலும் மூன்று பெரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவார்கள் ...வழக்கம் போல் அனைவரும் உணவு அருந்தும் போது கண்ணீரில் மூழ்கினால் ப்ரியா ...
சிறிது நீரம் கழித்து ப்ரியா தனது அறையில் உறங்க செல்லும் முன் "போகதே போகதே" என்ற பாட்டை போல அவளின் தொலைபேசி பாடதுவங்கியது..குழந்தை தாயை கட்டியணைக்க சென்றது போல் படுக்கையை பார்த்து சென்றவள் ..தொலைபேசியின் ஓசை கேட்டு மெல்ல அதன் அருகே சென்றால் ..யாருடைய தொலைபேசியையோ பார்ப்பது போல மெதுவாக தொலைபேசியை எடுத்து அதில் புதியதாக படிக்க துவங்கிய குழந்தை எண்களை படித்தது போல மெல்ல படித்தால் ஆச்சிரியத்துடன் ....
தெரியாமல் யாராவது அல்லது தவறாக யாராவது
எண்களை மாற்றி அழைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் ..தொலைபேசியின் வரவு அழைப்பு பொத்தனை அழுத்தி ...
சொல்லுங்கள் என்றால் .....
யாரும் மறுபக்கம் பேசவில்லை ...
மறுபடியும் சொல்லுங்கள் என்றால் .....
ஏனென்றால் மறுபக்கம் மெல்ல மூச்சுவிடும் சத்தம் அவள் காதில் விழுந்தது...
பின்பு மெதுவாக மறுபக்கத்தில் இருந்து " நான் தாங்க சாம்" உங்க கல்லூரியில் ஒன்ன படிக்கிறது.
ப்ரியா : சாம் ... அப்படி யாரையும் எனக்கு தெரியாதே ..
சாம் : ஆமாங்க உங்கள எனக்கு தெரியும் ஆனா என்ன உங்களுக்கு தெரியாது.. ஏன்னா நீங்க இரண்டாம் ஆண்டு நான் முன்றாம் ஆண்டு...
ப்ரியா : சரிங்க எதுக்கு என்னோட நீங்க இந்த நேரத்துல பேசனும் ..
சாம் : தப்பா நெனைக்காதிங்க ...
ப்ரியா : கண்டிப்பா தப்பா தா எடுத்துப்பேன்...நீங்க யாருன்னே தெரியாம இந்தநேரத்துல என்னால பேச முடியாது தயவுசெய்து இத திரும்ப பண்ணாதிங்க ..
என்று சொல்லி தொலைபேசி இணைப்பை துண்டித்தாள்...

சாம் : மூன்றாம் ஆண்டு கல்லூரியில் படிப்பவன்.சராசரி குடும்பத்தில் பிறந்தவன் அப்பா வங்கி அலுவலர் அம்மா வீட்டை பார்த்து கொண்டிருப்பவர் பத்தாம் வகுப்பு படிக்ககூடிய ஒரு தங்கை ..நன்றாக படிப்பவன் ..எல்லோரிடமும் நன்றாக பழகுபவன். தங்கைக்கு வீட்டில் முதலிடம் கொடுப்பவம் எதுவாக இருந்தாலும் முதலில் தனது தங்கையிடம் சொல்பவன் ...
புகை மது என்ற எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன். நண்பர்கள் என்றால் முதலில் சென்று உதவுபவன்...மட்டைப்பந்து விளையாடுவது அவனது பொழதுபோக்கு ..எல்லா ஞாயிற்றுக்கிழமையும் காலையில் கிறிஸ்தவர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு தேவையான அனைத்தயும் செய்துவிட்டு மதியம் உணவு அருந்திவிட்டு அம்மா அப்பா ஓய்வு எடுக்கும் நேரத்தில் மட்டைப்பந்து தனது நண்பர்களுடன் விளையாட செல்வான் அன்றும் அப்படித்தான் விளையாடிவிட்டு வீடுதிரும்பும் போது தனது கல்லூரில் தன்னுடன் படிக்கும் டேவிட் என்ற வீட்டின் அருகில் உள்ள நண்பனை பார்த்தான்.
சாம் : டேய் டேவிட் எங்க விளையாடவா என்று ஆரம்பித்தான் ..
டேவிட் : இல்ல டா சும்மா கடலுக்கு போலாம்னு ...
சாமுவேல் : ஓ ... சரி டா போய்ட்டுவா ..
டேவிட் : நீயும் வரியாடா ??
சாம் : இல்லடா வேலை இருக்கு நீ போயிட்டு வா என்றான் ...
டேவிட் : சரி அப்போ வா உங்க வீட்டுக்கு போகலாம்
என்றான் ..
சாம் : எங்கப்பா படிப்பை பற்றி கேட்ப்பார் பரவாயில்லையா என்றான்..
டேவிட் : என்னடா என்று இழுத்தான் ...
சாம் : சும்மா சொன்னேன் என்று சொன்னவண்ணம் மற்ற நண்பர்களிடம் சொல்லிவிட்டு டேவிட் கொண்டுவந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தன் வீட்டிற்கு சென்றான் ..
டேவிட் சிறுவயதில் இருந்தே சாமுவேலுடன்
பள்ளியில் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பன் ஆனால் மட்டைபந்து அவனுக்கு விளையாட தெரியாது அதனால் சாம் விளையாட செல்லும் போது டேவிட்க்கு அழைப்பு விடுப்பதில்லை ... கோவிலில் நடக்கும் எல்லா வழிபாடுகளிலும் இருவரும் தவறாமல் கலந்துகொள்வார்கள் ...
வீட்டிற்கு சென்றதும் சாமுவேல் அம்மா என்னங்கபா முடிஞ்சு தா விளையாட்டு ...அப்படியே அதை தொடர்ந்து என்ன டேவிட் காலைல சாமியார் ரொம்பநேரம் வழிபாடு செஞ்சாரு .....ஆமா அங்கிள் பதிலுக்கு டேவிட்...
...
தொடர்சியாக டேவிட் என்ன அங்கிள் பண்றீங்க ..
சாம் அப்பா : ஒன்னு இல்லப்பா இந்த மாச கணக்கு பாத்துக்குட்டு இருக்கே ...அடுத்த மாச வேற வங்கி கணக்கெடுப்பு வருது அடுத்த ...
டேவிட் : நா எதாவது உதவட்டுமா ..
சாம் அப்பா : நிச்சயமா ஆனா இப்ப இல்லை நல்லா படிச்சு முடிச்சதுக்கு அப்புறம்....
டேவிட் : சிரித்த படியே ... சரி அங்கிள்...
அதற்குள் புத்தகத்தோடு வந்த சாமுவேல் சரிப்பா நாங்க மாடியில போய் படிக்கிறோம் ..
சாம் அப்பா : சரிப்பா ..தொடர்ந்து அப்பாவ கேட்டதா சொல்லு டேவிட்
டேவிட் : சரி அங்கிள் ...
இருவரும் சேர்ந்து மாடிப்படி ஏறும் போது..
பின்னாலிருந்து ..... டேய் சாமுவேல் மாடியில துணி காயுது அத தங்கச்சிகிட்டே குடுத்தனுப்பு ..
சாம் : சரிம்மா ....
மாடியில் அவனது தங்கை இல்லை...
சாம் யோசனையோடு எங்கே போயிருப்பாள் ..
டேவிட் : சரிடா ரொம்ப யோசிக்காத நீ போய் கொடுத்துட்டு வா ...

சாம் சரி என்று சொல்லிவிட்டு துணியை எடுக்க கையை நீட்ட தொட்டால் வெட்டி விடுவேன் என்பதுபோல் சிரித்த முகத்தோடு அண்ணா என்று இருவரின் பின்னால் வந்து நின்றால் ..சாம் வாயை திறப்பதருக்குள் ஹாய் எங்கிருந்த என்றான் டேவிட் ... கீழ அறைய சுத்த செஞ்சிக்கிட்டு இருந்த நீங்க வந்தத கவனிக்கல மன்னிச்சிடுங்க அண்ணா என்றால் பாசத்தோடு துணிகளை எடுத்துகொண்டே ...
டேவிட் ; பரவாயில்லம்மா என்றான் பணிவோடு ..
தங்கை : சரி அண்ணா நீங்க படிங்க நா அம்மா கிட்ட துணியே கொடுத்து விட்டு நானும் படிக்கிறேன் என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு மாடியிலிருந்து இறங்கினால் ....
மாடியில் இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்தனர் பின்பு பஞ்சாயத்தில் எல்லோரும் இப்புடியே அமைதியா இருந்தா எப்படி யாராவது பேசுங்க... என்று ஆரம்பிப்பது போல டேவிட் மெல்ல அப்புறம் என்னடா பரீட்சைக்கு படித்துவிட்டாயா என்றான்.
சாம் மறுமொழியாக : எல்லாமும் முடிக்கவில்லை சில பகுதிகளை முடித்து விட்டேன் என்றான் ..
தொடர்ந்து .... நீ என்று நிறுத்தினான் ...
டேவிட் : எல்லாத்தையும் முடிச்சுட்டே இன்னும் ஒரு தடவ திரும்ப படிச்சு பாத்துட்ட அவ்வளவு தா என்றான்..
சாம்: அது தானே சும்மா நீ வீட்ட விட்டு வெளியவரமாட்டியே .....எல்லாத்தையும் முடிச்சுட்டு மூளைக்கு ஓய்வு கொடுக்க வந்திருப்ப ..
டேவிட் : சிரித்து கொண்டே...
திடீரெனெ ஊருக்குள் வெள்ளம் வந்தது போல் அண்ணா உனக்கு அழைப்பு வந்திருக்கு யாருன்னு தெரியல வந்து பாருங்க என்று கீழிருந்து தங்கையின் குரல்...
கை தொலைபேசியை வாங்கி வருகிறேன் என்று சொல்லி கீழிறங்க அவன் தங்கை மாடியில் ஓடிவந்து " இந்தாங்க அண்ணா என்றால்" மூச்சுவிடாமல் ...
சிறிது கோபத்தோடு நிறைய அக்கறையோடு எம்மா நா வந்து எடுத்துக்க மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே ... சரி நன்றி என்று சிரித்துக்கொண்டே தொலைபேசியின் அழைப்புக்கு பதில் சொல்லுங்க என்றான் ...
மறுபக்கத்திலிருந்து : நீங்க சாம் தானே என்று ஒரு பெண்குரல் ...
மறுமொழியாக
சாம் : சொல்லுங்க ...
ஹாய் நான் தா காயத்ரி பேசுகிறேன் என்றால் ..
(காயத்ரி கல்லூரியில் சாம் மற்றும் டேவிட் உடன் படிக்கும் மாணவி)
மறுமொழியாக
சாம் : சொல்லுங்க காயத்ரி என்ன விஷயம் ஏன் திடீர் என்று அழைப்பு விடுத்திருக்கிறீர்கள் என்றான்...
காயத்ரி : ஒரு முக்கியமான விஷயம் நீங்க எனக்கு உதவ முடியுமா என்றால் ...
சாம் : என்னால் முடிந்தால் கண்டிப்பாக செய்கிறேன் சொல்லுங்க .என்றான்.
காயத்ரி : போன வருடம் நான் ஒரு பாட திட்டத்தில் தோற்றுவிட்டேன் அதை இந்த வருடம் திரும்ப எழதவேண்டும் ஆனால் என்னிடம் அதனுடைய குறிப்பு பாட புத்தகம் இல்லை அதனால் இரண்டாம் ஆண்டு படிக்கும் யாராவது ஒருவரிடம் எனக்கு குறிப்பு புத்தகத்தை வாங்கி தர முடியுமா? நான் கேட்ட அனைவரிடமும் பாட புத்தகம் மட்டும் உள்ளது ஆனால் குறிப்பு புத்தகம் இல்லை அதனால் எனக்கு இந்த உதவியை செய்யமுடியுமா? நாளை முதல் பரீட்சை விடுமுறை துவங்குவதால் நான் நாளை எனது தாத்தாவின் ஊருக்கு செல்கிறேன் எனவே கலை 10:00 மணிக்கு முன்பு கிடைக்குமா என்றால் ..
சாம் : அதனால் என்ன கண்டிப்பாக வாங்கி தருகிறேன் என்றான் ....அவளும் மிகவும் நன்றி என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ....
தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு டேவிட்டை பார்த்தான் ... அவனோ புத்தகத்தை ஒரு ஒரு பக்கமாக திருப்பியவண்ணம் இருந்தான் ..மெதுவாக சாமுவேல் அவனிடம் சென்று நம்ம வகுப்பு மாணவி காயத்ரி அழைத்திருந்தால் புத்தகம் அவளுக்கு குறிப்பு புத்தகம் வேண்டும்மா என்றான் .....
மறுமொழியாக டேவிட் நீ ஏன் சுரேஷ்யிடம் கேட்க்ககூடாது என்றான் ....சாமுவேல் முகத்தில் கேள்விக்கு பதில் கிடைத்த சந்தோஷத்தில் ...
சுரேஷ் கை தொலைபேசி எண்ணுக்கு அழைத்தனர் ...மறுமுனையில் யாருங்க என்று சுரேஷின் அம்மாவின் குரல் ..ஏற்க்கனவே சுரேஷின் வீட்டிற்கு பலமுறை சென்றுள்ளதால் சாமுக்கு சுரேஷின் அம்மாவின் குரல் தெரியும் எனவே ...தொடங்கும் போதே அம்மா நான் சாமுவேல் பேசுகிறேன் என்றான் மறுமொழியாக ...
சொல்லுப்பா என்று சிரித்த முகத்தோடு எப்படிப்பா இருக்கே என்றார் ...சாம் சிரித்த முகத்தோடு நல்லா இருக்கம்மா என்றான் ....
சுரேஷின் அம்மா என்னப்பா விஷயம் என்றார் ..
சுரேஷிடம் ஒன்று கேட்க்கனும்மா என்று பதில் சொன்னான் சாம்
அவன் இல்லையப்பா அவனுடைய பெரியப்பா ஊருக்கு போயிருக்கான் வருவதற்கு நான்கு நாட்களாகும் திடீர் என்று அவரது அப்பா அழைத்து சென்றார் ... என்னப்பா எதாவது முக்கியமான விஷயமா என்று கேட்டார் ... சாம் மறுமொழியாக இல்லம்மா புத்தகம் ஒன்று கேட்கலாம் என்று .....இழுத்தபடி பரவாயில்லைம்மா நான் அவ வந்த பின்பு வாங்கி கொள்கிறேன் என்றான் ... வேணும்னா அவனோட பெரியப்பா கை தொலைபேசி எண்னுக்கு அழைதுபாருங்க என்றார் சுரேஷ்ன் அம்மா ..சாம் மறுமொழியாக : இல்லையம்மா இங்கு வேறு யாரிடமாவது வாங்கி கொள்கிறோம் தொந்தரவுக்கு மன்னிக்கவும் என்று சொல்லி அழைப்பை துண்டித்தனர் ...பின்பு இருவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அழைத்தனர் பலரிடம் குறிப்பு புத்தகம் இல்லை என்ற சொல்லே காதில் ஒலித்தது ...கடந்தவருடம் பாடப்புத்தகம் மாற்றியதால் தான் இந்த குறிப்பு புத்தகம் மூன்றாம் வகுப்பு படிப்பவரிடமும் இல்லை என்றான் டேவிட்.....
சரிடா இப்ப என்ன பண்றது என்று சிறிது யோசித்த வண்ணம் டேவிட்டிடம் திரும்ப கேட்டான் ....சாமுவேல்..
பின்பு நாம் ஏன் மேடம் ஜான்சி அவர்களிடம் கேட்க கூடாது என்றான் சாமுவேல் ..சரி என்று டேவிட் தலையாட்ட இருவரும் மேடம் ஜான்சிக்கு வீட்டு தொலைபேசிக்கு அழைத்தனர் ....தொலைபேசி அழைப்பில் மேடம் ஜான்சி யார் சொல்லுங்க என்று சொன்னதும் பயத்தில் டேவிட் சாம்மிடம் கை தொலைபேசியை கொடுத்தான் சட்டென்று தொலைபேசியை வாங்கி பட்டென்று சாம் மேடம் என்றான் ...தொடர்சியாக ...
மேடம் : சொல்லு சாம் என்னவிஷயம் என்றார் ...
சாமுவேல் : இல்ல மேடம் எங்களுக்கு இரண்டாம் வருட குறிப்பு புத்தகம் வேண்டும் என்றான் ..
மேடம் : இல்ல சாமுவேல் என்னிடம் இல்லை நீ ஏன் எதாவது இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் கேட்கக்கூடாது என்றார் ..
சாம் : எங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டோம் ஆனால் அவர்களிடம் இல்லை அதனால் தான் உங்களிடம் கேட்டோம் என்றான் ...
மேடம் : அப்படியா ... என்று சொன்னபடியே யோசித்தவண்ணம் எனக்கு தெரிஞ்சு ப்ரியா வெச்சிருக்கா அவகிட்ட வேணும்னா கேட்டுபார் என்றார் ...
சாம் : சரி மேடம் ....
மேடம் : நான் அவளோட கை பேசி எண் தருகிறேன் நீ வேண்டுமானால் அவளிடம் கேட்டு பார் என்று என்னையும் கொடுத்தார் ...
சாம் இதற்க்கு முன்பு அந்த பெண்ணிடம் பேசியதில்லை ஆனால் பார்த்திருக்கிறான்.
இருவருக்கும் புத்தகம் கிடைகபோகிறது என்ற சந்தோசம் முகத்தில் இருந்தாலும் தெரியாத பெண்ணிடம் இருந்து எப்படி புத்தகத்தை வாங்குவது என்று புரியாமல் குழம்ப ...சாமுவேல் தங்கை மாடிக்கு வந்து அண்ணா அம்மா ரெண்டுபேரையும் சாப்பிட கூப்பிட்டாங்க என்றால் சரி ஒரு சில நிமிடத்தில் வருகிறேன் என்று அவளை அனுப்பிவிட்டு ப்ரியா கை பேசிக்கு அழைத்தனர் ....(அந்த நேரம் என்ன நடந்தது என்று உங்களுக்கு மேலே சொல்லப்பட்டு விட்டது )
இனி எப்படி புத்தகத்தை வாங்கினான் சாமுவேல் அதனால் என்னென்ன நடந்தது என்று பார்ப்போமா .......
திரும்பவும் அழைகதிர்கள் என்றம் அழைப்பை துண்டித்துவிட்டால் ப்ரியா இப்போது எப்படி அவளிடம் பேசுவது எப்படி அவளிடம் புத்தகத்தை வாங்குவது .....இருவரும் குழம்ப சட்டென்று தோன்றியது சாம்முக்கு ஒரு புது திட்டம் ...
டேவிட்டிடம் திட்டத்தை சொன்னான் அவனும் சரி என்று சொல்லி ..
டேவிட் கை தொலைபேசியில் இருந்து ப்ரியாவிற்கு செய்தி அனுப்பினர் ....
செய்தி " எனக்கு உன்னுடைய குறிப்பு புத்தகம் வேண்டும் உடனடியாக நாளை காலை 8 மணிக்கு ரயில் நிலையத்திற்கு வந்து வாங்கி கொள்கிறேன் "
சாம் .....
பதில் எப்போதுவரும்...
எப்படி வரும் .......தெரியாது .....
வந்தது பதில் " மன்னிக்கவேண்டும் நாளை காலை கண்டிப்பாக தருகிறேன் " என்று ...
ஒ ஒ என்ற சத்தத்துடன் இருவரும் மகிழ்ச்சியில் இருவரும் நாளை காலை சென்று வாங்கி விடலாம் என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் அவர் அவர் வீட்டிற்கு சென்றனர் ....
கல்லூரி பரீட்சை விடுமுறை என்பதால் சாமுவேல் புறப்படும் போதே அவனது அம்மா கேட்பதற்கு முன்பே சாம் புத்தகம் வாங்க போவதையும் அதை இன்னொரு மாணவியிடம் கொடுத்துவிட்டு வீடுதிரும்புவதகவும் சொன்னதால் யாரும் அவன் புறப்படும் நேரத்தில் கேள்வி கேட்கவில்லை ...

சாம் ஊருக்கும் ப்ரியாவின் ஊருக்கும் 18 மைல் தூரம் என்பதால் காலை 6:00 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துகொண்டு டேவிட் வீட்டை நொக்கி புறப்பட்டான் ....

டேவிட்டும் சரியாக தயார் நிலையில் இருந்ததால் இருவரும் ப்ரியாவின் ஊரின் ரயில் நிலையத்தில் 7:45 க்கு சென்று சேர்ந்தனர் .....

வெகுநேரம் ஆகி விட்டது அவளை காணவில்லை ..
எப்பொழுது வருவாள் ....
என்னவென்று புரியவில்லை ...
தொலைபேசியிலும் அவளை தொடர்புகொள்ள முடியவில்லை ..

நேற்று தொலைபேசியில் செய்தி அனுப்பியவள் இன்று ஏன் ஒரு செய்தியும் அனுப்பவில்லை ....யோசித்த வண்ணம் சாம் தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தான் ஆனால் அவன் கண்கள் பாதையில் அவள் எப்போது வருவாள் என்ற ஏக்கத்தொடு காத்திருந்தது ......

சிறிய சினுங்கல் சிணுங்கியது அவனுடைய தொலைபேசி ஏக்கத்தோடு என்னையும் பாரடா அவள் என்னுள்ளும் வருவாள் என்ற செய்தியோடு ...
சோர்வடைந்த கண்கள் உறங்குவதற்கு தயாரானது போல இமைகள் இரண்டும் மூடி...ஆழ்ந்த தூக்கத்திற்கு அழைத்து செல்லபட்டவன் திடீரென அலறியடித்து எழுந்தது போல அவன் இமைகள் இரண்டும் திறந்து தொலைபேசியில் வந்த செய்தியை பார்த்தது .....

அதில் ...

" வந்துகொண்டு இருக்கிறேன் " என்ற செய்தி ப்ரியா என்ற பெயரில் இருந்தது.......

வேகமாக தனது தொலைபேசியை எடுத்து தமிழ் படத்தில் வழக்கம் போல் கேட்பதுபோல் ப்ரியாவின் தொலைபேசிக்கு " ஏன் தாமதம் " என செய்தி அனுப்பினான்.....

மறு பதில் எதுவும் வரவில்லை 10:00 மணிக்குள் காயத்ரியிடம் புத்தகத்தை கொடுக்கவேண்டும்.. சட்டென்று டேவிட் காயத்ரிக்கு அழைத்து நாங்கள் புத்தகத்தோடு வருகிறோம் என்று சொல் ...
டேவிட் சிரித்துக்கொண்டே எண் கை தொலைபேசியில் அழைக்க பணம் மீதி இல்லை என்றான் ..
சாம் : சரி அப்படியென்றால் கடைக்குச்சென்று உனக்கும் எனக்கும் சேர்த்து கைபேசியில் பணம் அனுப்பிவிட்டு வா என்றான் ....
சரி என்று சொல்லிவிட்டு டேவிட் காற்றாக இரு சக்கர வாகனத்தை எடுத்துகொண்டு அங்காடியை தேடி புறப்பட்டான் ..
அவன் புறப்பட்ட அடுத்த நிமிடம் ...
சாம் கைதொலைபேசி செய்தியுடன் அழைத்தது " எங்கிருக்கிறாய் நான் வந்துவிட்டேன் "
வேகமாக சாமுவேல் நான் ரயில் நிலையத்திற்கு வெளியில் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் நிற்ககிறேன் என்றான் ...
அவன் அனுப்பிய அடுத்த நொடியில் பத்து பதினைத்து பேர் அவனை சூழ்ந்து கொண்டனர் ..அவனது தொலைபேசியை வாங்கினர் அதில் உள்ள செய்தியை பார்த்த அடுத்த நொடி அனைவரும் சேர்ந்து சாமுவேலை சரமாரியாக தாக்கினர்......

காரணம் ....
உணவு அருந்தும் போது கண்ணீரில் மூழ்கினால் ....
காரணம் .......ப்ரியா சொன்னது ...

தினமும் சிலர் அவளின் கை பேசிக்கு தவறாக அழைத்து தவறாக பேசுகிறார்கள் என்று....
ஆனால் கைபேசியில் எண் எதுவும் காட்சியளிக்கவில்லை ..

சிலர் செய்யும் தவறு நல்லவர்களையும் .......
வருத்தத்தில் ஆக்கும்.........

எல்லா புதிய வசதிகளும் நம்மை நிம்மதியாக வாழ வைக்க .......
வாழ்க்கையை அழிக்க அல்ல .......

எழுதியவர் : (19-Nov-13, 8:12 pm)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 240

மேலே