===துளிச்சூடி===
அன்னையைத் தொழு
அன்பாய் இரு
அகத்தூய்மை செய்...
அறம் போற்று
அறிவேந்து
அரசியல் படி...
ஆக்கம் செய்
ஆதிக்கம் தவிர்
ஆண்மைத் தவறாதே...
ஆணவம் எரி
ஆதியை அறி
ஆழமாய்ப் பேசு...
இரக்கம் காட்டு
இல்லாதோருக்குதவு
இழிவு விலக்கு...
ஈகை செய்
ஈன்றோர் போற்று
ஈழம் நேசி...
உண்மை சொல்
உறுதியாய் இரு
உழைப்பை நம்பு...
உடல்வலி கொள்
உறவு வளர்
உலகம் கல்...
எளிமையாய் இரு
எளியோரைத் தாங்கு
எதிரே நில்...
ஏமாற்றம் ஒதுக்கு
ஏணியாய் இரு
ஏழ்மை விரட்டு...
ஐய்யம் போக்கு
ஐம்புல னடக்கு
ஐக்கியம் அறிந்திடு ...
ஒற்றுமைப் பேனு
ஒன்றாய் இரு
ஒழுக்கம் ஓம்பு...
ஓயாமல் விழித்திரு
ஓய்வின்றி பசித்திரு
ஓர் வரலாறு படைத்திடு...
-------------நிலாசூரியன்.