சதுரங்கம்-11

இன்ஸ்பெக்ட்டர் விஜய், இந்த பிரச்னையை தான் பார்த்துக் கொள்வதாக கூறி விட்டு சென்றுவிட்டார்
இனி தனக்கு எந்த பிச்சனையும் வராது என்று மனம் நிம்மதி அடைந்தாள் உஷா,,,


அதே நேரம், தன் மேலதிகாரிகளிடம் அனுமதி பெற்று மோகனின் வீட்டை சோதனை செய்து கொண்டிருந்தார் இன்ஸ்பெக்ட்டர் விஜய்,,

"சார் எந்த ரூம்னு சொன்னிங்க"- என்றார் கைரேகை நிபுணர் சந்திரபிரகாஷ்,

"ரைட் சைடு-ல மூணாவது ரூம்"- எல்லாம் தெளிவாக உஷாவிடம் கேட்டு தெரிந்து வந்திருந்தார் விஜய், பின்னால் புதைக்கப் பட்ட நாய் உட்பட,

ஒரு பக்கம் மோப்ப நாய் கொண்டு வீடு முழுவதும் அலசினார்கள்,,, மறுப்பக்கம்

கதவை திறந்தார் கைரேகை நிபுணர் சந்திர பிரகாஷ்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, அந்த அறை


பளிச்சென்று இருந்தது,,, கொலை நடந்ததற்கான என்ன அடையாளமும் அங்கு இல்லை,,,,,,,,, மோகன் உடலும் அங்கு இல்லை,,,,,,,, தரையில் சிறு இரத்த புள்ளி கூட இல்லை

"என்ன மிஸ்டர் விஜய் இங்க கொலை நடந்ததற்கான அறிகுறியே இல்லையே"- என்றார் சந்திர பிரகாஷ்

இன்ஸ்பெக்ட்டர் விஜய் ஏதும் பேசாமல் அந்த அறையையே பார்த்து கொண்டிருந்தார்,,, பின்

"அதன் எனக்கும் கொழப்பமா இருக்கு எதுக்கும் உங்க பாரன்சி ரிபோட் குடுத்துடுங்க சார்"- என்றார் விஜய்

"ஓகே மிஸ்டர் விஜய்"- என்று தன் வேலையை ஆரம்பித்தார் சந்திர பிரகாஷ்


முழுதாக அறை மணிநேரத்திற்கு பிறகு,


"மிஸ்டர் விஜய்"

"சொல்லுங்க சார்"

"கண்டிப்பா இங்க கொலை நடந்திருக்க சான்ஸ் இல்ல,,, இங்க மனித இரத்தமோ, மனித கைரேகையோ எதுமே இல்ல"- என்றார் சந்திர பிரகாஷ்

குழப்பத்தில் ஆழ்ந்தார் விஜய்,,,,


"ஓகே மிஸ்டர் விஜய் இதற்கான ரிபோர்ட் இன்னைக்கு ஈவ்னிக் உங்க டேபிள்-க்கு வரும்", சொல்லி விட்டு கிளம்பினார் சந்திர பிரகாஷ்

விஜய் மட்டும் அந்த வீட்டையே பார்த்து கொண்டிருந்தார்,,,

எல்லாரும் சென்ற பிறகு,,,,,

மோகன் கொல்லப்பட்ட அறைக்கு சென்றார் விஜய்,,,,,,, அங்கு கப்போர்ட் இடுக்கில் பாதி முகம் மட்டும் காட்டிய மஞ்சள் நிற file -ஐ எடுத்தார்

அதை யாருக்கும் தெரியாமல் தன் சட்டையினுள் மறைத்து வைத்து கொண்டார்

சுற்றும் முற்றும் பார்த்தார்,,,,,,,,,, யாரும் பார்க்க வில்லை உறுதியானது

ஒன்றும் நடக்காதது போல வந்து ஜீப்பில் ஏறினார்

"ம்ம்ம் ஆபீஸ் வேண்டாம் என் வீட்டுக்கு போ"- ஜீப் ஓட்டுபவருக்கு கட்டளை இட்டார்

மனதிற்குள்,"அப்பாடா!!!!!!!!!! வந்த வேலை முடிந்தது,,,,,,,,,, "


(விளையாடுவோம்,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (21-Nov-13, 11:17 am)
பார்வை : 407

மேலே