30 -தந்திர காட்டில் நான் 4-உள்முக தரிசனம்-கார்த்திக்
தத்துவதரிசனம் (20)
சிந்தனைத்துவம் எப்போதுமே ஞானம்
ஆகாது -சிந்தனை என்பது ஞான வாசலுக்கு
செல்லும் முதல் படிக்கட்டு அவ்வளவே
ஆனால் சிந்தனைவாதிகள் தங்களை
ஞானவான்கள் என்று நினைகின்றனர்
இது வேடிக்கையாக இருக்கிறது
சிந்தனை என்பது வெறும் சிந்தனைதான்
அது அனுபவங்களின் பிரதிபலிப்பு -ஆனால்
ஞானம் என்பது வெறுமையாகும் ரகசியம்
தத்துவதரிசனம் (21)
கடவுள் கொள்கையை மறுப்பது
மட்டுமே நாஸ்திகம் ஆகிவிடாது
அந்த கொள்கைக்கு மாறாக பேசுவதும்
அதனை கேலி செய்வதும் பகுத்தாறிவாளித்தனம்
என்பது அதை விட கேலிக்குரியது
கடவுள் என்பது வெறும் கொள்கை
கிடையாது ஆகையால் பகுத்தறிவிற்கும்
அதற்கும் சம்பந்தமே கிடையாது
கடவுள் என்பது இதயத்தின் சங்கீதம்
கடவுள் என்பது நரம்புகளின் புன்சிரிப்பு
கடவுள் என்பது புத்தியின் பூரணம்
கடவுள் என்பது சத்தியத்தின் தவிப்பில் வரும்
பெரும் உணர்வு ......அதை தாண்டியும் உள்
கடந்து வியாபித்திருக்கும் ஒரு மகாசூன்யம்
தத்துவதரிசனம் (22)
தன்னை குறித்து சிந்திப்பது சுயநலம்
என்பது பொய்களின் பெரும் பொய்.....
உன்னை குறித்து நீ சிந்திப்பதை விட
வேறு எவரால் சிந்திக்க இயலும்
முடியவே முடியாது .....ஆகையால்
உனது போக்கை குறித்தும்,
உனது செய்கைகள் குறித்தும்,
உனது எண்ணங்கள் குறித்தும்
சிந்திக்க தொடங்கு .......உன்னை
பற்றிய சிந்தனை உச்சத்தை தொடும்
போது அந்த பூகம்பம் நிகழும்
அதுவரை காத்திரு அந்த வெடித்தலில்
நீ உன்னை இழப்பாய் ....அப்போது
நீ சொல்லிகொள் நான் அனாதி என்று
அப்போது உன்னிடம் உன்னை பற்றிய
சிந்தனை இருக்காது ......அங்கு நீ சுயநலமற்ற
சுயம்புவாகிறாய்
************(தத்துவதரிசனம் தொடரும் )***********
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்

