முடிவு தெரியவில்லை

ஒரு தட்டில் என் இதயத்தை வைத்தேன் ...
மறு தட்டில் என் இதயம் இல்லாத உடம்பின் விலையை பொருளாய் வைத்தேன்.....

இதயத்தின் மதிப்பை யாரும் பார்க்கவில்லை ...
இதயம் இருப்பவர் போல் யாரும் தெரியவில்லை ...

எல்லோருடைய கண்களும் பெற்றோரின் செல்வாக்கில் ......
இருந்த வீடும், நிலமும் கடைசியில் அடகு கடையில்..

இதயத்தை கேட்டவனிடம் என் பெற்றோர் கொடுக்கவில்லை ..
இதயம் இல்லாதவர் கேட்ட பொருளில் நானும் ஒன்று என்பதை அவர்கள் நினைக்கவில்லை ...

இதயத்தை விட்டுவிட்டு பொருளுடன் என்னை போகச்சொன்னார் ...
இதயம் இல்லாமல் என்னோடு வாழச்சொன்னார் ..

இல்லறத்திற்கு இதயம் தேவை இல்லை என்றேன்னிவிட்டார் ...
இன்பமாக நான் வாழ்வேன் என மகிழ்ந்துவிட்டார்

வாழ்க்கையை யாருடனும் வாழ முடியும் என்றார்..
வருத்தமில்லாத வாழ்க்கை என்று மற்றவர் முன் நடிக்கச்சொன்னார்

வாழ்க்கையில் முன்பு நடந்ததை இப்போது மறக்கச்சொன்னார்.....
மறுபடியும் வாழ்க்கையை துவங்கச்சொன்னார் ...

மற்றவர்களும் இப்படித்தான் வாழ்கிறார் என்றார் ..
மறப்பதும் மன்னிப்பதும் வாழ்க்கை என்றார் ...

இதயத்தில் இருப்பவனை மறந்துவிடவா .....
இல்லறத்தை இதயம் இல்லாமல் துவங்க சொன்ன பெற்றோரை மன்னித்துவிடவா......?

இல்லை ...!!!!!!

இதயம் இல்லாமல் இல்லறத்தை துவங்கசொன்ன பெற்றோர்களை மறந்துவிடவா ...
இதயத்தில் இருப்பவனிடம் என்னை மன்னித்து ஏற்று கொள் என்று மன்னிப்பு கேட்கவா ...

எது வாழ்க்கை .....

மணக்கோலத்தில் நான் ...
மண்டபத்தின் உள்ளேயும் வெளியேயும்....
மணமகன் கோலத்தில் அவர்கள்....

எழுதியவர் : சாமுவேல் (27-Nov-13, 10:41 am)
சேர்த்தது : சாமுவேல்
பார்வை : 94

மேலே