காத்திருப்பு
விதைகளை விதைத்து விட்டு
அறுவடைக்காக காத்திருக்கும்
விவசாயியை போல்!
உன் மேல் பார்வை விதையை தூவி விட்டு
உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்!!
உன் பார்வைகள் பல கவிதை பேசுகிறது!
ஆனால் உன் உதடுகள்தான் உச்சரிக்க மறுக்கின்றது!!
உன் உள்ளம் என்னிடம் பேச துடிக்கிறது!
ஆனால் எங்கோ ஓர் மூலையில்
உன் தன்மானம் மட்டும் தடுக்கின்றது!
என்பது எனக்கு தெரியும் பெண்ணே!!
நான் உன்னை தினமும் பார்க்கிறேன்!
தினம் தினம் நீ புதிதாய் தெரிகிறாய்!!
உன் பொன் சிரிப்பை பார்த்த பின்புதான் மொட்டுகள்
எப்படி மலர்கின்றன என்பதயே அரிந்தேன்!!
உன் பதிலுக்கான என் ஏக்கங்களும்!
உன் மீதான என் நினைவுகலும்!
மெகா சீரியலை போல நீண்டுகொண்டே இருக்கின்றன!!
உன் பதிலுக்காக இன்று மட்டுமல்ல!
என் ஆயுள் முலுவதும் கூட காத்திருப்பேன்!!!