எசக்கியேலின் எசப் பாட்டு எதிர் பாட்டு -1

மலைகளிடையே
மல்யுத்தம் .....-..
தன்னில் பதிந்த முதலடி
யாருடையது என்று...?

மலர்க்கொத்தில் மனப் புயல்...-
தங்களில் எந்தப் பூவில்
தேனீ முதல் முத்தம்
பதித்தது என்று...?

எசக்கியேல்:நாங்களும்தானே பூக்கள்
தேனீக்கள் ஏன் தங்கள்
முத்தப் பதிவுகளை
நிறுத்திவிட்டன?

கடலலைகள் மத்தியில் கலவரம்...-
எந்த அலை தோன்றியது
முதன் முதலில் என்று...?

எசக்கியேல்:நாங்களும்தான் கரைகள்
ஏன் அலைகள்
எங்களை நோக்கி வருவதில்லை?

கவிதைக்குள் கடுங்குழப்பம்
எந்த வரியின் எந்த எழுத்தால்
ஏற்றம் பெற்றது கரு என்று...?

எசக்கியேல்::நாங்கள் மொழியாச்சே!
எப்படி
எப்பொழுது
எழுத்துக்கள் கூடி
மொழியை நீக்கி/விலக்கி
வைத்துவிட்டன!

காலம் மொழிந்தது இப்படி.....,

எந்தக் கால்
இன்றும் உள்ளதோ.
அதுவே...!!!

எந்தத் தேனீ
முத்தப் பதிவை நிறுத்தியுள்ளதோ
அதுவே...!!

எந்த அலை மீண்டு வரவில்லையோ
அதுவே...!!!

எந்த எழுத்தை
மொழி நீக்கிவிட்டதோ
அதுவே....!!!

கவிஞனுக்கு புரியாத புதிர்
கருத்துக்களில் எந்த கருத்து
சத்தியத்தின் கழிவு என்று...?

காலம் மொழிந்தது இப்படி..,

"இதற்கான என் தேடலில்
எப்போது விடை கிடைக்கும் ...???"

எசக்கியேல்: எங்கள் மொழி
காலம் கடந்ததாகி விட்டதோ?
புரியாத புதிராகிவிட்டதோ?
அல்லது
சத்தியத்தின் கழிவாகி விட்டதோ?

காலம் தேடலை நிறுத்தட்டும்
இதற்கான விடையைப்
பகரட்டும்!

எழுதியவர் : அகன்-எசக்கியேல் (30-Nov-13, 7:59 am)
பார்வை : 96

மேலே