கேவலம்

காற்று வீசிச்சென்றுவிட்டது
காத்திருந்து எதைத் தேடுகிறாய்
மல்லிகைப்பூ வாசத்தில்
மயங்கிக் கிடந்த மலைப்பாம்பு
மெல்ல சிரம் தூக்கி பார்த்தது
என்வனத்தில்
இன்னொரு விழுங்கி ......
இனியும் ஜீவித்து இருப்பதைவிட
இன்றே இறப்பதே மேலென்று
போ -
உன்னையும் துணைக்கு அழைக்கிறது .

எழுதியவர் : - சுசீந்திரன் (30-Nov-13, 9:51 pm)
Tanglish : kevalam
பார்வை : 113

மேலே