உனக்காய்
நீ நடந்த பாதை எங்கிலும்
உன் வாசனை நுகர்கிறேன் நான்
நீ வருவாய் என நினைத்தே நான்
என் வீட்டு கதவு அடைபதில்லை........
என் வீட்டு ரோஜாசெடியும் உனக்காய்
தினம் ஒரு பூ பூக்கிறது உன் கூந்தல் சேர்ந்திட அதனுடன் நானும் காத்திருக்கிறேன் .........
மழையை எதிர் நோக்கும் பூமி போல்
உன்னை எதிர் நோக்குகிறேன் நான்
நீ வராமல் போனால் வாடிப் போவது
என் வீட்டு ரோஜா மட்டும் அல்ல நானும் தான் ........
வந்து நீ போனால் என் விடியல் நலமாய் ........
தவறாமல் வந்து விடு உனக்காய் தவம்
கிடக்கிறேன் என் வீட்டு படிக்கல்லாய் நான்.....