விதியின் விளையாட்டு

மலைமே லொருமரம் மனதில் நினைத்தது
மலையினும் உயரம் தானே யென்று
எவனோ ஒருவன் அங்கே வந்தான்
களைத்த மேனியின் குளிரைப் போக்க
உதிர்ந்த இலைகளை ஒன்று திரட்டி
கல்லில் அமர்ந்தான் தீயை மூட்டி
வீசிய காற்றும் துணையாய் நிற்க
கொழுந்து விட்டு எரிந்த தீயில்
காட்டு மரங்கள் சாம்பலாக

எழுதியவர் : (5-Dec-13, 7:00 pm)
பார்வை : 70

மேலே