இருட்டுத்தான் ஆனாலும்

இருட்டுதான்
ஆனாலும்
அந்த இடம் பரிசுத்தம்

அங்கே
ஏற்பவரும் இல்லை
ஏமாற்றங்களும் இல்லை

கண்கள்
அங்குள்ளவரை
கண்ணீர்
சுமக்கவும் இல்லை
சோகங்கள்
சிந்தவும் இல்லை

அங்கே
இருக்க இடமுண்டு
உண்ண உணவுண்டு
உணர்வுப் பரிவுண்டு

அங்கே
என்னைச் சுற்றிலும்
இரத்த ஆறுகள் தான்
ஆயினும்
கத்தியும் கலவரமும்
காணவே இல்லை

இங்கே
இந்த பூமிக்கு
நீ என்னை
அறிமுகம் செய்தபோதுதான்
அந்த வசந்தம்
நிரந்தமில்லை
என்பதறிந்தேன்

இதுகூடச் சோகமில்லை
இங்கிருக்கும்
வெளிச்சங்களில்தான்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை இரணங்கள்

இவைகளிலிருந்து
விடுபட

அன்னையே
மீண்டும் என்னை
எப்போதும் சுமக்க
இப்போதே உத்தரவிடு
உந்தன் கருப்பைக்கு

அந்த இடம்
இருட்டுதான்
ஆனாலும்
பரிசுத்தம்.

எழுதியவர் : கிருஷ்ணன் BABU (7-Dec-13, 1:09 pm)
பார்வை : 85

மேலே