சிறகுகள் முளைக்கவேண்டும்

என்
மனதிற்கு
சிறகுகள்
முளைக்கவேண்டும் ...

ஏன் தெரியுமா.?

மனம்...

அது ஒரு
மாட்டிகொண்ட
பறவையாக...
என்
அலுவலகம் மட்டும்
சுற்றி திரிகிறது ....

சமூக
பிரச்னை பற்றி
சற்றும் சிந்திக்க கூட
சங்கடம் கொள்கிறது ....

பக்கத்துக்கு
வீட்டி மனிதர்களிடம்
பழக்கம் கொள்ள
நேரம் இல்லை
நொந்து கொள்கிறது ....

சரி ...

இரவு நேரங்களிலாவது
இயற்கை ரசித்து
இன்பம் பெறலாம் என்று
நினைக்கும் போது...

அடுத்த நாள் ,

அலுவலக சிந்தனை
மனதை மழுங்க செய்கிறது ....

இப்படி,

சுருங்கி போன
என் மனதிற்கு
ஒரு
சிறகு
எப்போது முளைக்கும் ...!

இது
எல்லாருக்கும்
ஏற்படும் எதார்த்தம் என்று...

என்னால்
ஏற்று கொள்ள முடியவில்லை ...

அலுவலங்கள் எல்லாம்
அடிமைகளை உற்பத்தி செய்யும்
ஆலையாக மாறிவிட்ட
இந்த காலத்தில் ...!

மன மகிழ்ச்சியை
விரும்பாமல்...

பண மகிழ்ச்சியை
விரும்பும்...

மனிதர்களோடு
மட்டுமே
என்
வாழ்கை பயணப்படுகிறது..!

இந்த
இயந்திர வாழ்க்கையை
முடித்துவிட்டு ...

அழகான வாழ்க்கை
அமைத்து கொள்ள
எனக்கு
ஒரு சிறகு முளைக்கவேண்டும் ...

எழுதியவர் : தமிழ் மகன் (10-Dec-13, 5:36 pm)
பார்வை : 205

மேலே