விருதுகள்-2013-“ பழம்பாடல்கள் மீட்டெடுப்பு மாமணி-2013 “

பழம்பாடல்கள் மீட்டெடுப்பு மாமணி-2013


அன்னியர் அல்லர் இவர் :நம்மவர்
தன்னில் தமிழ்ப்பற்று மிக்கவர் :நல்தோழர்.
கண்மருத்துவர் தொழிலில்: நல்லவர்
பண்மருத்துவர் தளத்திற்கு : வல்லவர்

சங்கம் வளர்த்த தமிழுக்கு யாதொரு
பங்கமும் வாராமற் இருந்திட இவரிங்கு
பழம்பாடல்கள் மீட்டெடுத்து பதிகிறார்
அழகு தமிழின் அணிகலங்களை அளிக்கிறார்..

தேடிப் பிடித்தளிக்கிறார் தேந்தமிழ் பாக்களை
வாடிவதங்கா மலர் கொத்துக்கள் அவையென
நாடி நாம் படித்துய்க்க பதிகிறார் நாளுமிங்கு
கூடி வாழ்த்துவோம் விருதொன்று அளித்தே

“ பழம்பாடல்கள் மீட்டெடுப்பு மாமணி-2013 “ எனும்
அழகியதாய் 2014ஆம் ஆண்டின் முதல் விருதென
தமிழ்த்தளத்தில் நாமளிப்போம் அவரென்றும்
வாழ்க பல்லாண்டு என வாழ்த்தியே வாருங்கள்..!!


மருத்துவர்.கன்னியப்பன் பெறுகிறார் விருது:
“ பழம்பாடல்கள் மீட்டெடுப்பு மாமணி-2013 “

எழுதியவர் : அகன் (14-Dec-13, 1:37 pm)
பார்வை : 116

மேலே