நவீன காக்கை வடை கதை

காகம் பறந்து வந்தது முன்னே இருந்த அடுக்குமாடி குடியிறுப்பை பாராமல் ஜன்னல் உள்ளே விழுந்தது... அங்கே பாட்டி இண்டக்சன் அடுப்பில் வடை சுட்டிருந்தார்...அதிலிருந்து ஒரு வடையை காக்கை களவாடியது...வடையை எடுத்து கொண்டு வெளியேறியது... மற்ற காகம் அது கொண்டு வந்த வடையை கேட்க கூடாது என்பதற்காக அருகிலிருந்த விலங்கியல் பூங்காவிற்கு சென்றது.. அங்கே தன் கொள்ளு தாத்தாவை ஏமாற்றிய நரி இருந்ததை கண்டது..
அந்நரி வடையை வாங்கவேண்டும் என்று முடிவெடுத்தது... நரி காகமிடம் பாட கூறியது... அதற்கு காகம் தலையாட்டி மறுத்தது..
நரி மனதில் ஓர் வெளுச்சம் தோன்றியது... உன் முகபுத்தகத்தை பார்த்தேன் நண்பன் விண்ணப்பம் அனுபியுளேன் என்றதும் காலில் பிடித்திருந்த வடையை விட்டுவிட்டு தன் அலைபேசியை எடுத்தது... ஆனால் அதற்கு ஒரு விண்ணப்பமும் வரவில்லை .... ஆனால் "ஏமாந்துட்டியா? வடைய நான் சாபிட்டுடேன்" என்ற செய்தி மட்டும் இருந்தது.... ஏமாந்த காகம் தன் முகபுத்தாக முகநூலை டி-ஆக்ட்டிவெட் செய்தது.....
----ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (22-Dec-13, 2:04 pm)
பார்வை : 522

மேலே