ஹரிகரன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹரிகரன் |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 10-Nov-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 791 |
புள்ளி | : 78 |
தமிழ் அவமானம் அல்ல....அடையாளம்...
நினைவுகளை எரித்து சாம்பலை
கண்ணீர் நதியில் கரைத்துவிட்டு
திரும்பி பார்க்கையில்...
அவனும் விறகு கட்டைகளுக்கிடையே
சாம்பலாகி கொண்டிருந்தான்..
நட்சத்திரங்கள் அற்ற இரவில்
மழை பொழியெல்லாம் என காத்திருந்தேன்..
மூன்று தெரு விளக்குகள் ..
இரு விழிகள் இரு இதழ்கள்
ஒரு பார்வை ஒரு சிரிப்பு
அரை துளி தூறல்
பூஜ்யமானது தேடல்...!
தேநீர் அமைத்த
ஆவி வேலி தான்
நம் இருவருக்குமான
எல்லை கோடு...!
பிரபஞ்சம் விரிவடைகிறதாம்..
அதனாலோ நம்மிடையே
இவ்வளவு தூரம்..?
பிரபஞ்சம் விரிவடைகிறதாம்..
அதனாலோ நம்மிடையே
இவ்வளவு தூரம்..?
நீ நெருங்கும் போது
மனமோ உருகும்..
உன்னை பார்க்காத
நெஞ்சம் நொறுங்கும்..
நீ சிரிக்கும் போது
எண்ணங்கள் பல எழும்..
கவிதையாய் வடித்தேன்
காகிதத்தில் அடைத்தேன்...!
-ஹரிகரன்
ஆத்தோரம் நடக்கையிலே
அழகாய் வீசும் தென்றலவள்....
மலையோரம் நடக்கையிலே
தத்தி ஓடும் மான் அவள்...!
காட்டோரம் நடக்கையிலே
தோகை விரிக்கும் மயில் அவள்...
பாலையோரம் நடக்கையிலே
தாகம் தீர்க்கும் நீர் அவள்...
என் அருகில் வரும் போது மட்டும் ஏனோ
கொடூர மிருகம் ஆகிறாள்...!
-ஹரிகரன்
பாலைவனத்தையும் பாழாக்கிவிட்டோம்
இது போதாதென்று மார்சையும் மாசுபடுத்த துடிக்கிறோம்..
தாத்தாவுக்கு வரும் டையாபெட்டிக்ஸ்
தரையில் தவழும் குழந்தைக்கும் வருகிறது...
சைக்கில் ஒட்டிய காலம் சென்று
பைக்கில் பறக்கிறோம்...
கொழுப்பைச் சேமித்து
பணத்தை கழிக்கிறோம்...
வானத்தைத் தொடும் முனைப்பில்
நம்மை தாங்கியுள்ள பூமி தாயை மறந்துவிட்டோம்...
ஆக்சிஜன்னை நமக்கு அளிக்கும்
மரத்தை வெட்டி
நமக்கு நாமே
ஆப்பு வைத்துவிட்டோம்....
சினிமா லிரிக்ஸை மனப்பாடம் செய்த நாம்
சிளபஸ்ஸை மனப்பாடம் செய்ய மறந்தோம்...
நற்சிந்தனைகள் விதைக்கும் நாடகங்களை பார்த்த நாம்
சீரியலை பார்த்து சீரழிந்து விட்டோம் ...
காண்போர் முன்