நாகரிக நரியிடம் இரையாகிய மனித இனம்

பாலைவனத்தையும் பாழாக்கிவிட்டோம்
இது போதாதென்று மார்சையும் மாசுபடுத்த துடிக்கிறோம்..
தாத்தாவுக்கு வரும் டையாபெட்டிக்ஸ்
தரையில் தவழும் குழந்தைக்கும் வருகிறது...
சைக்கில் ஒட்டிய காலம் சென்று
பைக்கில் பறக்கிறோம்...
கொழுப்பைச் சேமித்து
பணத்தை கழிக்கிறோம்...
வானத்தைத் தொடும் முனைப்பில்
நம்மை தாங்கியுள்ள பூமி தாயை மறந்துவிட்டோம்...
ஆக்சிஜன்னை நமக்கு அளிக்கும்
மரத்தை வெட்டி
நமக்கு நாமே
ஆப்பு வைத்துவிட்டோம்....
சினிமா லிரிக்ஸை மனப்பாடம் செய்த நாம்
சிளபஸ்ஸை மனப்பாடம் செய்ய மறந்தோம்...
நற்சிந்தனைகள் விதைக்கும் நாடகங்களை பார்த்த நாம்
சீரியலை பார்த்து சீரழிந்து விட்டோம் ...
காண்போர் முன் நிமிர்ந்து நடந்த நாம்
கணினி முன் கூனி விழுந்தோம்....
சிட்டாக பறந்து கொண்டிருந்த நாம்
பெட்டாக நான்கு சுவற்றுக்குள் அடைபட்டோம் ...
தன்னையே அடமானம் வைத்து
நாட்டை காப்பாற்றிய காலம் சென்று
நாட்டை அடமானம் வைத்து
தன வயிற்றை வளர்த்து கொள்கின்ற காலம் வந்துவிட்டது...
குவைட்டாக இருந்த நாம்
வைல்டாகி போய்விட்டோம் காலச்சூழலில் ...
டாஸ்மாக்கால் வாழ்க்கையில்
பெயில் மார்க் வாங்கிவிட்டோம்...
பாரதியின் கனவு
கனவாகவே கரைந்தது ...
இறுதியாக நாம் நாகரிக நரியின் வேட்டைக்கு
இரையாகி வீழ்ந்துவிட்டது...!
-ஹரிகரன்

எழுதியவர் : ஹரிகரன் (26-May-14, 7:41 pm)
பார்வை : 96

மேலே