தொட்டாலும் ஷாக் அடிக்காது

மின்சாரத் துறை அதிகாரி பழைய இரும்பு சாமான் வாங்குபவனிடம்:
உன்ன இந்த பக்கம் வரக் கூடாதுன்னு உனக்கு எத்தன தரம் சொல்றது. கேக்க மாட்டியா??
பழைய இரும்பு சாமான் வாங்குபவன்:
இல்ல சார். ஒரு நாளைக்கு இல்லாட்டியும் ஒருநாள் இங்க வெட்டியா இருக்கும் ட்ரான்ஸ் பார்மர் என் பேரிச்சம் பழத்துக்கு வெல போகாதான்னுதான். இங்க அடிக்கடி வந்து போய்க்கிட்டிருந்தா என் நெனப்பு இருக்கும் பாருங்க. இத போடணும்னா எல்லாத்தையும் என்கிட்டேயே குடுத்துடுங்க. ஒரு கிலோ பேரீச்சம் பழம் அதிகமாவே குடுக்கறேன். நானும் லைப் ல செட்டில் ஆய்டுவேன் இல்ல.
அதிகாரி கோபத்துடன் வாட்ச்மேனை நோக்கி:
மொதல்ல இந்த ஆள வெரட்டுயா. அப்பப்ப இவன் வேற வந்து கடுப்பேத்துறான். இந்த டிபார்ட்மெண்ட்டுக்கே இது பெரிய அவமானமா இருக்கு. ச்சே...