சுடும் பூ

கரு கருன்னு கருத்தாட
வானம் உடுத்தும்போது 
கிறுக்கி மனசு தனித்தபோது 
குறு குறுன்னு
உருண்ட கண்ணு
உன்னை தேடுது.
 
பித்து பித்து
பித்தம் தனிக்க 
உத்தமி தேகத்த
உடுத்து அள்ளி 
முத்த சூட்டில்
பழுத்துபோறேன்
மூச்சு உரசிட. 

ஆசைய பூட்டல 
நீ ஏன் சாவி தேடுற. 
  
ஏக்கத்துல தவிக்கிறேன்!
ஏங்கவச்சு சிரிப்பதா ?
காட்டுவழி பாதையில
கல்லு முள்ளு இனிக்குதா? 
குயில் கூடு பாத்தியா?
கூடல் சத்தம் கேக்குதா?
வெடகோழி அடிக்கவா?
ஒரப்பா சமைக்கவா 
எச்சியூற திண்பியா
எச்சில் பாதி தருவியா.
 
பொன்னாங்கன்னி
சாறாக்கி வதைக்கவா? 
தங்க வளவி
உருக்க சொல்வியா ?

முருங்ககாய்
வறுத்து வச்சு
முறுக்கேற வைக்குறேன்.
இரட்ட மனசு
ஒட்ட வச்சு
தைக்க ஊசி தேடுறேன்.

மூக்குல வேர்வைய
மூக்குத்தியா சுமக்குறேன். 
முத்தத்தால் உடைக்க
நீயும்தான் மறுக்குற. 

கள்ளூட்டும் போதையா
தல சுத்த வைக்குற 
குருத்தோல குடிசைய
குமரி கூட்டீல் கட்டுற.
 
வாசல் வந்து போகுற
குடியேற தயங்குற 
விட்டு விட்டு எழுதுற
உன் டிக்குடிக்கு பேனாவா 
நொன்டி ஆட்டம் ஆடுறேன்.
எனக்கென்ன ஆனது.
 
சொட்டு சொட்டாய்
தூறும் தூரலில் 
தொட்டு பேசும்
சுகமே தெரியல.

கள்ளத்தனம் கூடிடுச்சு
தெரியுமா! தெரியுமா !!
கைதுசெய்ய தாலிகயிறு
வேண்டுதே! வேண்டுதே!!

நண்பர்ளே! சர சர சாரா காற்று மெட்டில் அந்த பாடலுக்கு என் வரிகள். பிழை இருப்பின் மன்னிக்கவும். உங்களது கருத்துக்களை வரவேற்கிறேன். 

- செஞ்சி மா.மணி

எழுதியவர் : - செஞ்சி மா.மணி (23-Dec-13, 1:43 pm)
பார்வை : 205

மேலே