அடிமை பெண்ணொருத்தி

ஆத்துக்கு அந்தப்புரம் ஆடோட்டி போறபுள்ள அறவயிறு கஞ்சிதூக்கி அவசரமா போறவளே கஞ்சி வெச்ச தூக்கு ஒண்ணு கிளிஞ்ச சேலை ரெண்டு ஆட்டுக்குட்டி மூணு ஆடோட்ட குச்சி ஒண்ணு இது எல்லாம் இவ சொத்து இடிஞ்ச மனச தூக்கி எங்க வெச்சு நீ போற சொன்ன கதை திரும்ப சொல்ல உன் நாக்குல சத்து இருக்கா..
அடங்காத அப்பங்கிட்ட உன் ஆத்தா உன்ன பெத்தா
பெத்ததுமே என் கணக்கு முடிஞ்சிதுணு அவன்போயி சேந்துபுட்டா..
பாலுக்கு ஏங்கும்போது
சாராயம் அவங்குடிச்சா சோத்துக்கு ஏங்கும்போது வப்பாட்டி அவவெச்சா படிக்க நா போனப்போ பத்துபாத்திரம் தேய்க்கவெச்சா பொறப்புன்னா ஈன பொறப்பு அது எனக்கு வந்துருச்சு
என் ஆத்தா செஞ்ச புண்ணியம்
நா இப்ப பாவப்படற அப்பனோட பேர மட்டும் நா வெச்சு என்ன பண்ண..
ஆண் ஜாதி வர்க்கமே என்ன வேற மாதிரி பாக்குதப்பா
அப்பங்கிட்ட முறையிட அவணொண்ணும் உத்தமனில்ல..
16 வயசுல நான் பாவப்பட்டு நிக்கரனே..
பாழாப்போன வயசு வந்து குத்தவெக்க வெச்சருச்சே..
பச்சமட்ட கட்ட பாவிமவ ஒருத்தனில்ல
சேலை எல்லாம் ரத்தம் சிந்தி ஈ மொய்க்க நாகெடக்க..
சொந்த காலுல நிக்ககூட முடியலையே..
மூணாங்காலு துணையோட..
நா போற ஊரவிட்டு..
எங்க போனாலும் பொழச்சுக்கலாம்..
இங்க இருந்தா என்கெதி எங்கம்மா கெதி
கால் போன போக்குல நா ஊரூரா போறேனே..
நாலுகாலு ஜீவன் மூணு என் துணைக்கு கூட வர ரெண்டு காலு மனுச மேல இல்லாத நம்பிக்கைய நாலுகாலு ஆட்டு மேல நாவெச்சு ஊர் போற பொம்பளைக்கு சுதந்திரம் அது இந்த மண்ணுல இப்போதைக்கு ஒண்ணுமில்ல..
ஏழேலு ஜென்மம் எடுத்தாலும் அடிமை அது பொம்பளதா..
"என்னமாதிரி பொம்பளைக்கு விடிவுகாலம் பொறந்தாத்தா"
"விடியுமடா நாளைக்கு பொற்கால பூமி ஒண்ணு"...

எழுதியவர் : Sandibeula (31-Dec-13, 11:39 am)
சேர்த்தது : சந்தோஷ் கண்ணன்.ஆ
Tanglish : adimai pennoruththi
பார்வை : 66

மேலே