சந்தோஷ் கண்ணன்.ஆ - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : சந்தோஷ் கண்ணன்.ஆ |
இடம் | : கோயம்புத்தூர் |
பிறந்த தேதி | : 12-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 86 |
புள்ளி | : 28 |
நான் கடந்த 4 ஆண்டுகளாகவே கவிதைகளை எழுதுகின்றேன்,ஏதாவது பிழை இருந்தால் மன்னிக்கவும்.
கட்டிபிடிக்கும் போது மட்டும் தன்னை காப்பாற்றி கொள்ள முந்தி கொண்டு முட்டி நிக்கின்றது அவளின்
#மார்பு
அந்தி மாலை...
மழைத்தூரும் வேலை...
மரங்களின் அசைவில் மெல்லிய காற்றில் கருமேகத்தில்
மல்லிகைத் தோட்டம்
மணம் வீச....
நீலப் போர்வையணிந்து என் முன்னே...
மின்னல் சிரிப்பில்...
பின்னல் நடையில்
என்னை கடந்த
அந்த நொடிகள்....
என் இதயத்தில் வேலை நிறுத்தம்....
மயங்கி விழுந்தேன்....
அவளின் இரக்கமற்ற இதயத்தில்..
மாதம் தவறாமல்
கோவில் வாசலில்
தவம் கிடக்கிறேன்...
என்றோ பார்த்த
அவள் விழிகளைத் தேடி...
காணாமல் போன அவளை
நான் தேடி நிற்க கண்முன்னே கடந்து செல்கிறாள் கணவனோடு....
கையில் குழந்தையை ஏந்தியவாரே...
கேட்காத வார்த்தை
பேசாத பேச்சு
பார்க்காத காட்சி
இமைக்காத கண்கள்
இல்லாத காற்று
வீசாத மரம்
பூக்காத பூக்கள்
வராத நாட்கள்
முடியாத வருடங்கள் மழையில்லா வானம்
நகராத மேகங்கள் மறையாத சூரியன் இரவில்லா பகல் இவையனைத்தும் இறைவனின் அர்ப்பனம் காதலர்களுக்கு மட்டும்.....
எங்கபுள்ள நீ போன,
உன் அம்மா அவ இங்க உன் தம்பி நானிங்க...
உசுர கையில புடுச்சு காத்திருக்கோம்....
ஒரு நல்ல சேதி வருமானு..
போனவ நீ அப்பிடியே போய்புட்ட,
திரும்பி வர உனக்கு மனசில்லையா....
உன் மாமன் உன்ன விடவில்லையா.? சொல்லிட்டு நீ வாடி..
என வளர்த்த உசுரு ரெண்டு எனக்காக காத்திருக்கு...
சோறு தண்ணி இல்லாம பாசத்துக்காக ஏங்கிகெடக்கு...
நா போனா ரெண்டு பேரும் பாச மழை பொழிவாங்க...
எனக்கு மட்டும் பாசமில்லையா...
என் தாய ஒருவாட்டி பாக்கறக்கு...
என் தம்பி காத்திருக்கா அவன் அக்கா முகத்த பாக்கறக்கு...
நல்ல சேதி அது நான் போனாமட்டுந்தா
வேலை வேலைனு அவன் போய்ட்டா
என் அம்மா தனிமையில தனியா பொளம்பிக்கிட்டு கெடக்கறா
ஈரப்பதங்களின்
பிண்டமாம் மேகம்
பொழிவது
மழையா ?
மையா ?
மழை என்றது
உலகம்
புது’மை’ என்றேன்
நான்..
ஒவ்வொரு துளியிலும்
ஒருவித கரு வைத்தேன்
எவ்வித சலனமின்றி
புதுவித கவியெழுதினேன்
ஓராயிரம் துளிகளில்
எந்த துளியில்
எந்தன் காதலி...!
அந்த துளியின்
மையெடுத்தேன்.
மையக்கருவில்
காதலை கவியில்
உண்டாக்கினேன்.
------
எண்ணற்ற துளிகளில்
என்னை தள்ளி
ஒரு துளி
துள்ளி துள்ளி
விளையாடியது.
அந்த துளியை
எந்தன் பிள்ளை
என்றேன்...!
-------
சிறு சிறுதுளிகளுக்கு
நடுவே
துறு துறுவென
நிலத்தோடு மோதி
அக்னி தெளித்தது
ஒருசில துளிகள்
நிச்சயம் இது
எந்தன் பாட்டன்
பாரதியின் ப
என்னவனே... !
உன்னையே நினைந்து
உன் பின்னாலேயே சுற்றும்
உனது பூமி நான்... !
உனக்கு வாழ்வில்
நிழலாய் இருக்க
என் இதயம்
காதல்
துப்பட்டாவை விரித்து
வானமாய் காத்திருக்கிறது... !
உன் அழகில்
மயங்கிய நிலவு
நான்... !
என்னை உதாசீனப்படுத்தி
நீ விலகும்போது
இரவாய் ஆகிறேன்...!
மறுநாள் பொழுது
உனைக் கண்டதும்
பகலாய் மாறிவிடுகிறேன்... !
எனது காலத்தைக் காட்டும்
காதல் கடிகாரம்
நீதானே என்னவனே...!
நீ என்னை
உற்று நோக்கும்போது
உன் ஒரு நொடிப் பார்வையினில்
தென்றலைக் காண்கிறேன்... !
மறுநொடி நீ
முறைத்துச் செல்ல
புயலின் தாக்கத்தை உணருகிறேன்... !
என்ன நான்
தவ
கண்டாங்கி சேலைகட்டி எட்டு மடிப்பு வெச்சு எட்டெடுத்து வாரவளே....
தல நெறயா பூ வெச்சு நெத்திபூறா பொட்டு வெச்சு
நெஞ்சகிள்ள வாரவளே....
வீதியில நீ சிரிச்சு போகயில
பவளம் பிறக்குதம்மா...
நீ நடந்த இடமெல்லாம் செண்பகமும் பூக்குதம்மா....
உன் கடைக்கண் பார்வை என் நெஞ்சை தாக்குதம்மா....
என்ன பாத்தும் பாக்காம நீ பேச
உன் கண்ணு மட்டும் பாக்குதம்மா....
என் உயிர்நாடி ரெண்டும் துடிக்குதம்மா....
ஆலமரத்துக்கு நா போற பின்னாடி நீ வாணு கொசுவம் என்ன வா வாணு அழைக்குதம்மா...
நா போற நீ வாடா
யாரும் பாக்காம நீ வாடாணு
கை அசைச்சு சொல்லயில ஊர்முழுக்க நா தேட ஊரெல்லாம் கொறட்ட சத்தம்
என் காதுல ஒலிக்க
உன் கொசுவம் ஆடும் அழகுல