கருவாச்சிக்காக

எங்கபுள்ள நீ போன,
உன் அம்மா அவ இங்க உன் தம்பி நானிங்க...
உசுர கையில புடுச்சு காத்திருக்கோம்....
ஒரு நல்ல சேதி வருமானு..
போனவ நீ அப்பிடியே போய்புட்ட,
திரும்பி வர உனக்கு மனசில்லையா....
உன் மாமன் உன்ன விடவில்லையா.? சொல்லிட்டு நீ வாடி..
என வளர்த்த உசுரு ரெண்டு எனக்காக காத்திருக்கு...
சோறு தண்ணி இல்லாம பாசத்துக்காக ஏங்கிகெடக்கு...
நா போனா ரெண்டு பேரும் பாச மழை பொழிவாங்க...
எனக்கு மட்டும் பாசமில்லையா...
என் தாய ஒருவாட்டி பாக்கறக்கு...
என் தம்பி காத்திருக்கா அவன் அக்கா முகத்த பாக்கறக்கு...
நல்ல சேதி அது நான் போனாமட்டுந்தா
வேலை வேலைனு அவன் போய்ட்டா
என் அம்மா தனிமையில தனியா பொளம்பிக்கிட்டு கெடக்கறா
என்புள்ள வரமாட்டாலானு....
உங்கள நம்பித்தா என்ன கட்டிவெச்சாங்க
என்ன கட்டிப்போட்டாங்க..
ஒருவாட்டி எனவிடுங்க..
ரெண்டு உசுரு பொலைக்கறக்கு...
வளர்த்தவங்க பாசம் அது எனக்கு தெரியும்
ராத்திரி பத்துமணியானாலும் சோத்தவெச்சு சாப்படவெச்சு பட்டினிகெடந்து என் ஆத்தா எனபாத்தா.... படிப்பவிட்டு படிக்கவெச்சு கேட்டதெல்லாம் என் தம்பி வாங்கிதந்தா...
ஒருவாட்டி எனவிடுங்க
என் உசுர நான் பாக்க கல்யாணம் முடுச்சுவைக்க அவன் வாழ்க்கைய அடகுவெச்சா
என் கழுத்து நெறஞ்சிருக்க என்ஆத்தா அவ கழுத்த கருக்கவெச்சா
இப்படி எனக்கொன்னுனா ரெண்டு பேரும் உசுர கொடுக்க..
நாமட்டும் இங்க என்ன பண்ண
என் புருச எனக்கு பெருசுனு நானிருந்தா எங்கம்மா என் தம்பி போயிடுவாங்க
என்புள்ள வரமாட்டானு....
ஊருவிட்டு ஊருபோனா எப்படியாச்சும் கண்டுபுடுச்சரலாம்
உலகம் விட்டு போயிபுட்டா...
நானிங்க நானில்ல
வெறும் உடம்புதான்...
அப்படினு சொல்லிட்டுவாடி...
எங்கம்மா மொகத்தபாரு கருவாடு ஆகிருச்சு,
நானிங்க பாசமில்லாம பைத்தியக்கார ஆகிட்டேன்...
ஒருவாட்டி நீ வாடி உன்மாமனையும் கூட்டிகிட்டு.....

எழுதியவர் : சந்தோஷ் கண்ணன்.ஆ (15-Jan-14, 3:33 pm)
பார்வை : 72

மேலே