தமிழர் உயர ஒன்றுபடு

உலகின் முதல் மாந்தன்
தானாக மொழிந்த ஓசையே
தமிழாகப் பிறந்தது - இதை
மொழியறிஞர்கள் ஏற்ற உண்மை.
மொழியில் வாழ்வியல் கூறி,
அதனோடு போரியல் வகுத்தான்,
காதலும் வீரமும் தமிழம்
என்றே கலைச்செய்யுள் வடித்தான்.
பேரும் ஊரும் நாட்டுநலமும்
இயற்கையினூடே வாழ்ந்த மாந்தன்
செங்கோல் கொண்டாண்ட தமிழன்
பல்நுட்பம் கண்டு சொன்னான்.
சில காலம்தான் அயர்ந்தான்
அயர அயரவேத் தாழ்ந்தான்.
தன் வாழ்வைத் தொலைத்தான்,
ஆண்ட இனம் வீழ்ந்தடிமையானது.
அறத்துடன் மறமேந்திய தமிழா,
வரலாற்றைப் படித்து உணரு,
வரும் தலைமுறை காக்க
விழித்தெழ வேண்டிய நேரமிது.
தலை நிமிர் தமிழா,
தமிழர் உயர ஒன்றுபடு.
தமிழ இனம் காக்க
நாம் தமிழரென ஒன்றுபடு.
- சு.சுடலைமணி.