அறிவாளி அவன் மட்டும் - மதுவை தேடி செல்லும் போது

அறிவாளி அவன் மட்டும் !
மதுவை தேடி செல்லும் போது !!
தன் கனவை !!
இதோ இந்த மதுவில் கரைத்து -
தன் குடும்பம் அழித்து
வாழ்வை தொலைத்து
இறுதியில் தானும் மரிக்கிறான் !
இதயம் இல்லாமல் !!
அப்பா என அழைக்கும் - தன்
பிள்ளை எண்ணம்
இவன் இதயத்தில்
இல்லாமலா போயிருக்கும் !!
மதி அழிக்கும் மதுவை அருந்தும்போது !!
மதுவை அருந்தும்போது உடன் வருபவன்
உண்மை நண்பனாம் - நட்பின்
மேன்மை இவ்வளவு இழிவாகி விட்டதே !!
தன் சந்தோசம் மது என்பவன்
அற்ப வாழ்வில் அழிகிறானே !!
தன் வாழ்வை இவனுக்கு அர்பணித்த
மனைவியை பாராட்ட
வார்த்தை வராத இவன்
தன்னுடன் மது அருந்த புதிதாய் வருபவனை
இவன் புகழும் விதம் - அடடா
அவன்தான் ஆண்மகனாம் !!
இதை தவறு என்று நாம்
அன்போடும் சரி
ஆத்திரத்தாலும் சரி - எப்படி சொன்னாலும்
இவன் தேடி அலைவது
இன்னொரு கோப்பை மதுவை தான் !!
இளைய சமுதாயம்
இதில் தான் சாதனை படைக்கிறது !!
மது நிச்சயம் தவறு என்றேன் !!
இழிவுபடுத்தினான் - என்னை
போடா பைத்தியம் என சொல்லி !!
உடனே புதிதாய் அழைத்தான் இன்னொருவனை
இணைந்தவன் நாளை முதன்முதலாய்
குடிக்க போகிறானாம் - அதனால்
"அறிவாளி அவன் மட்டும் தான் "
என்றான் என் இனிய நண்பன் !!
நிலை குலைகிறது என் இதயம்
அவன் என்னை பைத்தியம் என்று
சொன்னதால் அல்ல !
மதுவை தேடி சென்ற இருவரும்
என் நண்பர்கள் என்பதால் !!
நண்பன் அழிய நானும் காரணமா - தெரியவில்லை
எனக்கு - ஆனால்
அன்பும் நட்பும்
அழிய மதுவே காரணம் என்பதை
என் இதயம் உணர்கிறது
ஏதோ ஓர் இடத்தில் !!
------- மது அருந்துவதை இனி விட வேண்டும்
என எதிர் பார்க்கும் ஓர் இதயம் ----------